Tomorrow Rasi palan இந்த நாளின் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் நீங்களா?
மங்களகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 24 ஆம் நாளுக்கான [08 மார்ச் 2023, புதன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.;
நல்ல நேரம்:
காலை: 09.00 - 10.00 வரை
மாலை: 04.30 - 05.30 வரை
மேஷ ராசி பலன் மார்ச் 8, 2023 | Mesham rasi palan Tomorrow
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழிலில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
துலாம் ராசி பலன் மார்ச் 8, 2023 | Thulam rasi palan Tomorrow
மறதியால் முக்கியமான சில விஷயங்களை கோட்டைவிடுவீர்கள். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேறுவதில் உங்களுக்கு அலைச்சல் உண்டாகும். பணியிடத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் கல்வியில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அரக்கு
அதிர்ஷ்ட எண்: 9
ரிஷப ராசி பலன் மார்ச் 8, 2023 | Rishabam rasi palan Tomorrow
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பணப்புழக்கம் சுமாராக தான் இருக்கும். அனாவசிய செலவை குறைத்துக்கொள்ளவும். இத்தனை நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் நாள். குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். கண் மற்றும் பல் சார்ந்த பிரச்சனை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
விருச்சிக ராசி பலன் மார்ச் 8, 2023 | Viruchigam rasi palan Tomorrow
உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பாராத பணவருகையால் பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும். ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்க துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது எச்சரிக்கையாக இருங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் நற்பெயர் சம்பாதிக்க கடினமான உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் செய்யும் ஒருசில காரியங்கள் மற்றங்களுக்கு பேருதவியாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
தனுசு ராசி பலன் மார்ச் 8, 2023 | Dhanusu rasi palan Tomorrow
எல்லா பணிகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இதனால், மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். எதிர்காலம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்து விவகாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார பணியில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கடன் சம்பந்தமான பிரச்சனைகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு தாராளமாக இருக்கும். ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
மிதுன ராசி பலன் மார்ச் 8, 2023 | Midhuna rasi palan Tomorrow
எந்த காரியத்தையும் துணிவுடன் செய்வீர்கள். கடின உழைப்பிற்கு தக்க பரிசு காத்திருக்கிறது. கால்நடை சம்பந்தமான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பணபுழக்கம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் ஏற்படும் சவால்களை ஈஸியாக சமாளிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். இழுபறியாக இருந்த தனவரவு வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
மகர ராசி பலன் மார்ச் 8, 2023 | Magaram rasi palan Tomorrow
பணியிடத்தில் மற்றவர்களை நம்பாமல், தானே பணிகளை மேற்கொண்டால் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாகவே உள்ளது. சேமிப்பு உயரும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வர்த்தக பணிகளில் அதிகமாக முதலீடு செய்வதை குறைத்துக் கொள்ளவும். சுபநிகழ்ச்சிகளில் பங்குக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
கும்ப ராசி பலன் மார்ச் 8, 2023 | Kumbam rasi palan Tomorrow
அனைத்து விஷயத்திலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பீர்கள். உறவினர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி, அவர்களின் ஆதரவை பெறுவீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். மனதில் ஏற்படும் மனகுழப்பத்தை துணையுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். சிலர் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
கடக ராசி பலன் மார்ச் 8, 2023 | Kadaga rasi palan Tomorrow
மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். எண்ணத்தில் தெளிவு வேண்டும். கண்டதையும் நினைத்து கொண்டு, முக்கியமான காரியங்களில் கோட்டைவிட்டு விட வேண்டாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பணியிடத்தில் கீழ் பணிபுரிவர்களால் பிரச்சனை ஏற்படலாம். உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டும். அதேபோல், மற்றவர்களிடம் உங்க குடும்ப விஷயத்தை பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம்
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
சிம்ம ராசி பலன் மார்ச் 8, 2023 | Simma rasi palan Tomorrow
தன்னம்பிக்கையுடம் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். உங்களின் மீதே உங்களுக்கு புது நம்பிக்கை பிறக்கும். சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் சகஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. இருப்பினும், நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். விலங்குகளிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
மீன ராசி பலன் மார்ச்8, 2023 | Meenam rasi palan Tomorrow
பணியிடத்தில் பனிச்சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தில் கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை முக்கியம். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பணத்தை சேமித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
கன்னி ராசி பலன் மார்ச் 8, 2023 | Kanni rasi palan Tomorrow
சிந்தனையின் போக்கில் உங்களிடம் உறுதியும் உத்வேகமும் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். சிலர் நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் நினைத்துக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றுவருவீர்கள். துணையிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். சுமாராக இருந்த தொழிலில் திடீர் லாபம் அதிகரிக்கும். கல்வி சர்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2