இன்று திருமலை திருப்பதியில் ஆகஸ்ட் மாத விரைவுத் தரிசன கோட்டா வெளியீடு
கொரோனா தொற்று காரணமாக, திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைத்து வருகிறது -விரைவுத் தரிசன கோட்டா இன்று வெளியிடப்படுகிறது
இன்று திருப்பதியில் ஆகஸ்ட் மாத விரைவுத் தரிசன கோட்டா வெளியயிடப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்துக்கு உள்பட்ட ரூ.300 விரைவுத் தரிசன கோட்டா இன்று (ஜூலை 20-இல்) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைத்து வருகிறது. பக்தா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனா். ஒவ்வொரு மாதத்துக்குத் தேவையான டிக்கெட்டுகள் அதற்கு முன் வரும் மாதங்களில் இறுதி வாரங்களில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாத ரூ.300 விரைவுத் தரிசன கோட்டா டிக்கெட்டுகள் இன்று ஜூலை 20-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.