தாராபுரம் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

தாராபுரம் வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

Update: 2022-01-13 04:15 GMT

தாராபுரம் வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மேடு உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 4-ந்தேதி தொடங்கியது. அன்று முதல்,  நேற்று வரை பகல், உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருமாளுக்கு, மோகினி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின், சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள் பரமபத வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து காலை 6 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News