ஜாதகப் பொருத்தம் என்றால் என்ன? அத எப்படி பாக்குறாங்க? வாங்க பாக்கலாம்
Perfect Jathagam Porutham-திருமண வாழ்வில் ஒரு குறிப்பிட்ட ஆணின் ஜாதகத்தோடு ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்துகிறதா என்பதைக் காணும் வழக்கம் காலம் காலமாக நம்மிடையே இருந்து வருகிறது.;
Perfect Jathagam Porutham
Perfect Jathagam Porutham
விவாகம் அல்லது திருமணம் என்பது மனித குல மேன்மைக்காகவும், நன்மைக்காகவும் நிர்ணயிக்கப்பட்ட நல்ல சுப நிகழ்ச்சியாகும். தெய்வீகமானது. இரு மனம் மட்டுமன்றி இரு வேறு குடும்பங்களின் சேர்க்கை ஆகும். திருமணம் என்பது ஒருவரின் வாழ்நாளில் ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி ஆகும்.
இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்க ஆரம்பிக்கும் போது அவர்கள் இல்லறத்தை நடத்தி வம்ச விருத்தி செய்து கடைசி வரை இணை பிரியாமல் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் லட்சியமாகவே இருக்கும்.
ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு பொருத்தமான துணை அமையாவிட்டால் இருவரின் வாழ்வும் கேள்விக்குறியாக மாறிவிடும். அதனால் தான் இருமனம் இணையும் திருமண வாழ்வில் ஒரு குறிப்பிட்ட ஆணின் ஜாதகத்தோடு ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்துகிறதா என்பதைக் காணும் வழக்கம் காலம் காலமாக நம்மிடையே இருந்து வருகிறது.
ஜாதக பொருத்தம் பார்க்கும் முறை:
ஜாதகப் பொருத்தம் பல வகைகளில் காணப்படுகின்றது. ஒரு சிலர் பெயர் பொருத்தம் வைத்துப் பார்ப்பார்கள். சிலர் நட்சத்திரம் வைத்துப் பார்ப்பார்கள். பெரும்பாலோர் தசவிதப் பொருத்தம் பார்ப்பார்கள். மற்றும் பிறந்த தேதி, நேரம், மற்றும் இடத்தை வைத்து அமைக்கப்படும் ஜாதகத்தை வைத்து ஜாதகப் பொருத்தம் பார்ப்பார்கள்.
ராசி மற்றும் நட்சத்திர அடிப்படையில் திருமணப் பொருத்தம்
இந்த முறையில் திருமணப் பொருத்தம் காண பெண் மற்றும் ஆணின் நட்சத்திரம் மற்றும் ராசி மட்டும் போதும். நட்சத்திரங்கள் மற்றும் ராசி எண்ணிக்கை அடிப்படையில் இது கணக்கிடப்படும். மேலும் ராசிக்கான விலங்கு, கணம் முதலியவையும் கருத்தில் கொள்ளப்படும். இந்த முறையை தசவித பொருத்த முறை என்றும் கூறலாம். இது பொதுவாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளது.
தசவிதப் பொருத்தங்கள்:
தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம், வேதைப் பொருத்தம்
மேற்கண்ட தசப் பொருத்தம் என்னும் பத்து பொருத்தம் காண்பதற்கு, திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் ராசி மற்றும் நட்சத்திரம் போதுமானது. பத்துப் பொருத்தங்களும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவற்றில் சில விதிவிலக்குகளும் உண்டு.
தசப் பொருத்தங்களுக்கு மேற்பட்ட சில பொருத்தங்கள்
தற்காலத்தில் மேற்சொன்ன தசப் பொருத்தங்கள் தான் பெரும்பாலும் பார்க்கப்படுகின்றது. ஆனால் இவற்றைத் தவிர வேறு சில பொருத்தங்களும் உள்ளதை ஜோதிட நூல்கள் வாயிலாக அறியலாம்.
பட்சிப் பொருத்தம், ஊர்ப் பொருத்தம், கூட்டாளிப் பொருத்தம், மரப் பொருத்தம், நாடி நட்சத்திரப் பொருத்தம், அஷ்ட வர்க்கப் பொருத்தம், நாட்டுப் பொருத்தம், ரேகைப் பொருத்தம் என இன்னும் சில பல பொருத்தம் காணும் முறைகளும் உள்ளன. இவை யாவும் தற்போது நடைமுறையில் இல்லை.
பிறந்த தேதியை வைத்து பொருத்தம் காணும் முறை
திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஆண் மற்றும் பெண்ணின் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இதன் அடிப்படையில் அவரவருக்குரிய ஜாதகம் தனித்தனியாகக் கணிக்கப்படும். பின்னர் ஜாதகத்தில் பன்னிரண்டு கட்டங்கள் மற்றும் அவற்றில் 9 கிரகங்கள் அமைவு பெற்ற நிலை இதனை கருத்தில் கொண்டு பொருத்தங்கள் காணப்படும். ராசி, லக்னம், இவற்றின் அதிபதிகள், குரு, சுக்கிரன் இவற்றின் நிலைகள், காணப்படும். மேலும் செவ்வாய் தோஷம் கருத்தில் கொள்ளப்படும்.
ஜாதகப் பொருத்தம்
ஆண் பெண் இருவரின் சாதகத்தையும் வைத்து பொருத்தம் பார்க்கும் முறை சாதகப் பொருத்த முறை ஆகும். பொதுவாக ஜாதக பொருத்த முறையில் பெண் ஜாதகத்தைத் தான் முதன்மையாக வைத்து பார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
- இருவரின் லக்கினம் மற்றும் சந்திரன் ஒன்றுகொன்று சஷ்டாஷ்டகமாக அமையக் கூடாது. அதாவது 6,8 ஆக அமையக் கூடாது. குறிப்பாக 16 வது நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் நிற்கக் கூடாது.
- பெண் சாதகத்தின் 1,2,4,5,7,9,10,11 பாவக அதிபதிகள் ஆண் சாதகத்தில், ஆட்சி, உச்சம், நட்பு, சம நிலையில் இருக்க வேண்டும். மாறாகப் பகை நீசம், அஸ்தமனம் பெறக் கூடாது. துர் ஸ்தானங்களில் இருக்கக் கூடாது.
- தசை நடத்தும் அதிபதிகளும் சஷ்டாஷ்டகமாக இருக்கக் கூடாது.
- இருவர் சாதகத்திலும் தோஷ சாம்யம் இருக்க வேண்டும்.
- ஆண் பெண் இருவரும் அமாவாசை, கிரகணம் என பிறப்பு இருக்கக் கூடாது
- தசா சந்திப்பு கூடாது. குறைந்தபட்சம் ஒரு வருடம் வித்தியாசம் இருக்க வேண்டும்.
- செவ்வாய் தோஷம் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அதாவது இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கலாம். அல்லது இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கக் கூடாது
தமிழ் திருமண பொருத்த அறிக்கையில் பெண் மற்றும் ஆணின் ராசி கட்டம், செவ்வாய் தோஷம், தோஷ சாம்யம், தசா சந்திப்பு போன்றவற்றை கருத்தில் கொள்ளப்படுகிறது. திருமணப் பொருத்ததில் நட்சத்திரம் ராசி மட்டும் தான் கருத்தில் கொள்ளப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2