வெவ்வேறு பெயர்களுடன் பஞ்சலிங்கங்கள். ஐந்து சிவன். இரட்டை விநாயகர்.
Panchalingam Temples -தர்மன்,பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கம் அமைந்துள்ள நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்;
Panchalingam Temples -திருமண்ணிப்படிக்கரை - இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 30 ஆவது தலமாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இலுப்பைபட்டு என்னும் ஊரில் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் இலுப்பைபட்டு உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல இலுப்பைபட்டு பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
இறைவன் விஷமுண்ட போது தேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தைப் பரிசித்த தலமென்பது தொன்றுதொட்டு நம்பிக்கை (ஐததீகம்).இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ளது.
ஒரே தலத்தில் வெவ்வேறு பெயர்களுடன் கூடிய பஞ்சலிங்கங்கள் உள்ளன. இத்தலத்தில் தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபட்ட சிவன் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்ட சிவன் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்ட சிவன் முத்துகிரீஸ்வரர் ஆகிய ஐந்து சிவனும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
படிகரைநாதர் சன்னதி கோஷ்டத்தில் நடன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. உள் பிரகாரத்தில் மதில்சுவரின் இடதுபுறம் சந்திரனும், மடப்பள்ளி அருகில் தலவிருட்சமான இலுப்பையும், விநாயகரும் காட்சி தருகின்றனர். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 30வது தேவாரத்தலம் ஆகும். வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என்று ஒரே இடத்தில் இரட்டை விநாயகர்களை தரிசிப்பது மிகுந்த சிறப்பு வாய்ந்தது.
இத்தலலத்தில் சித்திரை பௌர்ணமியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி, நவராத்திரி, சஷ்டி, திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும். நோய்கள் நீங்குவதற்கும், பணியில் சிறப்பிடம் பெறுவதற்கும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
தேவாரப்பதிகம்
உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர் மங்கையொர் கூறுடையான் வானோர் முதலாய பிரான் அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலைய பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2