பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் நினைவு தினம் இன்று
முருகனை வழிபட்டுவந்த புகழ்பெற்ற தமிழ்த்துறவி பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் நினைவு தினம் இன்று
பாம்பன் சுவாமிகள் என்று அறியப்பட்ட பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் நினைவு தினம் இன்று.
தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்த இவர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார்.
இவர் திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய "சண்முக கவசம்" பெரும் புகழ்பெற்றது.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சமாதி மற்றும் கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.