பழனி முருகன் கோவில் நடை திறப்பு: பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

பழனி மலை முருகன் கோவில், 5 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-01-19 05:01 GMT

பழநி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள். 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில்,  கடந்த 12ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூசத் திருவிழாவானது வருகிற 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்,  பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக,  கடந்த 14ம் தேதி முதல்,  18ம் தேதியான நேற்று வரை 5நாட்களுக்கு பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் பழனிக்கு வந்து 14ம் தேதிக்கு முன்னதாகவே பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இந்நிலையில்,  தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் தைப்பூசத் தேரோட்டம் ஆகியன, நேற்று நடைபெற்ற நிலையில்,  தற்போது ஐந்து நாட்கள் நிறைவடைந்து இன்று முதல்,  பழனி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழாவின்‌ 8ம் நாளான இன்று,  தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூசத் திருவிழாவின் கடைசி நாளான வருகிற 21ம்தேதி அன்று தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடி இறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News