Osho quotes Tamil ஓஷோ என்ற தத்துவக்கடல், அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஆளுமை

பலரது சிக்கலான கேள்விக்கும், புதிர்களுக்கும், வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கும் எளிமையான விளக்கம் கொடுத்தவர் ஓஷோ;

Update: 2022-09-21 07:56 GMT

'ஓஷோ' என்று அழைக்கப்படுகிற ரஜ்னீஷ் 1931-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் மத்தியப் பிரதேசத்திலுள்ள கச்வாடாவில் தோன்றினார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே துணிவும் ஆர்வமும் கொண்ட ஒரு கலகக்காரராய் இருந்தார். புதிய சிந்தனைகள் கொண்டவர்களை அப்படித்தானே மற்றவர்கள் சொல்வார்கள்


மற்றவர்கள் சொல்வதிலிருந்தும், படித்தும் அறிவதைவிட உண்மையைச் சுயமாய் அனுபவித்தறிவதே அவருடைய இயல்பு. இருபத்தொரு வயதில் ஞானம் பெற்றவர் அவர். தம்முடைய பட்டப்படிப்பை முடித்தபிறகு ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார்.

நாடெங்கும் பயணம் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியதோடு பழமையான மதவாதிகளுடன் வாதிடவும் செய்தார். காலகாலமாய் இருந்து வருவதாலேயே எதுவும் ஏற்கத்தக்கதாகிவிடாது, நவீன யுகத்தைச் சேர்ந்த மனிதனின் தலையில் பழைய கருத்து சம்பிரதாயங்கள் ஓர் அனாவசிய சுமை என்பது அவருடைய கருத்து.

ஓஷோவின் தத்துவங்கள்.


நான் அன்பின் காரணமாய் பேசுகிறேன், நீங்கள் அன்பின் காரணமாய் அதைக் கேட்கிறீர்கள். அதில் பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ நம்மிடையே ஒரு தோழமையை அது ஏற்படுத்தும்

நீங்கள் ஒரு பூவை விரும்பினால், அதை எடுக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் அதை எடுத்தால் அது இறந்துவிடும், அது நீங்கள் விரும்புவதை நிறுத்திவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை விரும்பினால், அது இருக்கட்டும்.

அன்பு என்பது உடைமையைப் பற்றியது அல்ல. அன்பு என்பது பாராட்டுக்குரியது

நல்லது-கெட்டது, கசப்பு-இனிப்பு, இருள்-ஒளி, கோடை-குளிர்காலம் -- சாத்தியமான எல்லா வழிகளிலும் வாழ்க்கையை அனுபவிக்கவும். அனைத்து இருமைகளையும் அனுபவியுங்கள்.

அனுபவத்தைப் பற்றி பயப்பட வேண்டாம், ஏனென்றால் உங்களுக்கு அதிக அனுபவம் இருந்தால், நீங்கள் இன்னும் முதிர்ச்சியடைகிறீர்கள்


துக்கம் ஆழத்தைக் கொடுக்கிறது. மகிழ்ச்சி உயரத்தைக் கொடுக்கும். சோகம் வேர்களைத் தருகிறது. மகிழ்ச்சி கிளைகளை அளிக்கிறது. மகிழ்ச்சி என்பது வானத்தில் செல்லும் மரம் போன்றது, சோகம் என்பது பூமியின் கருப்பையில் வேர்கள் இறங்குவது போன்றது. இரண்டும் தேவை, ஒரு மரம் எவ்வளவு உயரமாக செல்கிறதோ, அவ்வளவு ஆழமாக ஒரே நேரத்தில் செல்கிறது. பெரிய மரம், அதன் வேர்கள் பெரியதாக இருக்கும். உண்மையில், அது எப்போதும் விகிதத்தில் உள்ளது. அதுதான் அதன் இருப்பு

ஆக்கப்பூர்வமாக இருப்பது என்பது வாழ்க்கையில் அன்பாக இருப்பது. நீங்கள் வாழ்க்கையை நேசித்தால் மட்டுமே அதன் அழகை அதிகரிக்க முடியும். அதற்கு இன்னும் கொஞ்சம் இசை, இன்னும் கொஞ்சம் கவிதை, இன்னும் கொஞ்சம் நடனம் ஆகியவற்றைக் கொண்டு வர விரும்பினால் மட்டுமே நீங்கள் ஆக்கப்பூர்வமாக முடியும்

நட்பு என்பது தூய்மையான அன்பு. இது அன்பின் மிக உயர்ந்த வடிவம், அங்கு எதுவும் கேட்கப்படுவதில்லை, எந்த நிபந்தனையும் இல்லை, அங்கு ஒருவர் வெறுமனே கொடுப்பதை அனுபவிக்கிறார்

நீங்கள் நடக்க வேண்டும், உங்கள் நடைப்பயணத்தின் மூலம் வழியை உருவாக்க வேண்டும்; உண்மையின் இறுதி உணர்வை அடைவது அவ்வளவு சுலபமல்ல. நீங்களே நடந்து பாதையை உருவாக்க வேண்டும்; பாதை உங்களுக்காக தயாராக காத்திருக்காது. இது வானத்தைப் போன்றது: பறவைகள் பறக்கின்றன, ஆனால் அவை எந்த தடயத்தையும் விடாது. நீங்கள் அவர்களைப் பின்பற்ற முடியாது; எந்த தடயங்களும் எஞ்சியிருக்கவில்லை


மற்றவர் போல ஆக வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள், ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. உங்களை மேம்படுத்த முடியாது. நீங்கள் அதற்கு வர வேண்டும், அதை அறிந்து கொள்ள வேண்டும், உணர வேண்டும்

உண்மை என்பது வெளியில் கண்டுப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அது உணரப்பட வேண்டிய ஒன்று

நீ யாரென்று உனக்குத் தெரியாது. நீங்கள் அறிந்திருந்தால், எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.  நீங்கள் கருத்துகளைத் தேடவில்லை. மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம், அது பொருத்தமற்றது!

நம் சொந்தங்கள் எல்லாம் உள்ளே விஷத் தன்மை கொண்டவர்களாகவும் வெளியே இனிப்பு சுவை பூசப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.


வன்முறை என்பது ஒருவனுக்கு வியாதி..

ஆனால் அதுவே விலங்குகளுக்கு அது அவற்றின் இயல்பு.

ஒரு வேலையை பிடிக்காமல் வெறுத்து செய்பவன் அடிமையாகவே இருக்கிறான்.

வேலையே விரும்பிச் செய்பவன் அரசன் ஆகிறான்.

எத்தனை தவறுகள் வேண்டுமானால் செய்யுங்கள். ஆனால் எப்போதும் ஒரே தவறை மீண்டும் செய்யாதீர்கள்..

ஒருவன் தன்னிடமே சுகமாய் சமாதானமாய் இருக்க முடியவில்லை என்றால். யாரிடமும் அமைதியாய், சமாதானமாய் இருக்கவே முடியாது!

பார்வையிழந்த உங்களுக்கு கண்களை தர விரும்புகிறேன். ஆனால், நீங்களோ என்னிடம் ஊன்றுகோலை எதிர்பார்க்கிறீர்கள்

நல்லவன் செய்த ஒரு தவறுக்காக அவனை விட்டு விலகாதே. கெட்டவன் செய்த ஒரு நற்செயலுக்காக அவனிடம் உறவு கொள்ளாதே

விதையாக பிறவி எடுப்பது என்பது சரியே! ஆனால் வெறும் விதையாக மாண்டுபோவது என்பது துரதிர்ஷ்டம்

இதுவரை கேட்டது அனைத்தையும் மறந்துவிடு. உனது கோப்பையைக் காலியாக வைத்திரு!

மரத்துக்கு அருகில் செல்லுங்கள். யாரும் பார்க்காதபோது அதனுடன் பேசுங்கள்.மரத்தை தழுவிக் கொள்ளுங்கள். உங்களை நல்லவர் என்று அந்த மரம் உணரட்டும்!

சிலவற்றைப் பார்க்கும்போது உங்களுக்கு அழகாய் தெரிகிறது. அப்படியானால் உங்களுக்குள் அழகு இருக்கிறது!

நண்பன் என்பவன் குறைந்த அளவு பகைமை கொண்டவன். பகைவன் என்பவன் குறைந்த அளவு நட்பு கொண்டவன்.

புத்திசாலியான மனிதன் மாறிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஆடிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பான். அவனுக்கு வானம் கூட எல்லையாக முடியாது.

தியானம் உன்னை உன்னுடைய உள்ளே இருக்கும் புனிதத்தலத்திற்கு கூட்டிச்செல்லும். நீ அங்கே கடவுளை காணலாம், வேறு எங்கும் காண முடியாது.

நட்சத்திரங்கள், பாறைகள், நதிகள் என இவையாவும் உணர்வின்றி இருக்க முடியாது. உணர்வுதான் அவற்றின் வாழ்க்கையே. மனிதன் தலைகீழாகி விட்டான். மூளை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மேலும் மூளை உணர்வை அடக்கிவைக்கிறது.

கணவனாக இரு; எப்போதும் கணவனாகவே இருக்காதே! தாயாக இரு; ஆனால் எப்போதும் தாயாகவே இருந்துவிடாதே!

ஓஷோ எதையும் துணிவாகச் சொல்கிறவர், தமக்குத் தவறாய்ப்பட்ட எதன் மீதும் தாக்குதல் தொடுக்க அவர் தயங்கியதில்லை.  பகவத்கீதை, பதஞ்சலி யோக சூத்ரம், 'ஜென்' புத்த ஞானம் என்று மிகக் கடினமான விஷயங்களையெல்லாம் எளிமைப்படுத்தி உலகுக்களித்தவர் அவர். அவருடைய பேச்சில் சின்னச் சின்ன கவிதைகளும், உருவகங்களும், குட்டிக் கதைகளும் இடம் பெறும்.

நீரின் குளுமைபோல், பூவுக்குள் தேனைப்போல் அறிவுத் தெளிவு அவருக்குள் இயல்பாய் அமைந்தது. எதை வார்த்தைகளில் சொல்ல முடியாதோ அதை வார்த்தைகளில் தெரிவித்தவர் அவர்.

Tags:    

Similar News