உங்களை கண்டறிய வேண்டுமா? ஓஷோவின் பொன்மொழிகளை படிங்க

Osho quotes in Tamil-ரஜ்னீஷ் என்ற ஓஷோவின் சொற்பொழிவுகள் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஆளுமைத்தன்மையை கொண்டது.;

Update: 2022-09-14 04:46 GMT

Osho quotes in Tamil 

ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். இவர் தனது 21வது வயதில் ஞானமடைந்தார்.

வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட 'ஓஷியானிக்' என்ற சொல்லிருந்து தம் பெயர் உருவானதாக ஓஷோ குறிப்பிட்டுள்ளார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது எனப் பொருள். இச்சொல் அனுபவத்தை குறிக்கிறது. ஆனால்,அனுபவிப்பவரை குறிக்கவில்லை. எனவே, 'ஓஷோ' என்ற சொல்லை உருவாக்கியதாக ஓஷோ கூறுகிறார்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பிறந்து அமெரிக்கா வரை சென்று தனது ஆசிரமத்தை நிறுவிய துறவி மற்றும் ஆன்மீகவாதி ஓஷோ. ஓஷோ தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவராவார். மேலும் தத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஓஷோ எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்துபவர்.

Osho quotes in Tamil 

பல்வேறு மதங்கள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றி அவர் நாடு முழுவதும் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஆளுமைத்தன்மையை கொண்டது.

இவரது பல சொற்பொழிவுகளை இவரது சீடர்கள் நூல்களாக வெளியிட்டுள்ளனர். அவை ஒவ்வொன்றும் மிகச்சிறந்த ஆன்மீகப் படைப்புகளாகும்.

1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோவின் உடலை விட்டு உயிர் பிரிந்தது. ஓஷோவின் சமாதி மீது பொறிக்கப்பட்ட பொன்வரிகள்:

'ஓஷோ பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை. பூமி எனும் கிரகத்தில் அவர் பார்வையிட்ட காலம் டிசம்பர் 11,1931- ஜனவரி 19,1990.

ஓஷோவின் வாழ்க்கையில் பொதிந்திருந்த அதே அளவு ரகசியம் அவரது மரணத்திலும் மறைந்திருப்பது காலத்தின் நகைமுரண்

Osho quotes in Tamil 

இதோ ஓஷோவின் பொன்மொழிகள்

அறிவாற்றல் என்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். அறிவார்ந்தவராக இருப்பது போலியானது, இது ஒரு போலித்தனமான புத்திசாலித்தனம். அது உண்மையானதல்ல ஏனெனில் அது உங்களுடையது அல்ல, அது கடன் வாங்கப்பட்டது. புத்திசாலித்தனம் என்பது உள் உணர்வின் வளர்ச்சி. அறிவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது தியானத்துடன் சம்பந்தப்பட்டது.

நீங்கள் ரோஜாவாகவோ அல்லது தாமரையாகவோ அல்லது சாமந்திப்பூவாகவோ இருப்பது முக்கியமல்ல. நீங்கள் பூப்பதுதான் முக்கியம்.

யாரும் உயர்ந்தவர்களும் இல்லை, யாரும் தாழ்ந்தவர்களும் இல்லை, ஆனால் யாரும் சமமானவர்களும் இல்லை. மக்கள் வெறுமனே தனித்துவமானவர்கள், ஒப்பிடமுடியாதவர்கள். நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான்.

உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள், இல்லையெனில் நீங்கள் தங்களை தாங்களே அறியாத மற்றவர்களின் கருத்துக்களை சார்ந்திருக்க வேண்டும்

என் உண்மையான நண்பர் யார்? என்று கேட்காதீர்கள். நான் யாருக்காவது உண்மையான நண்பனா? என்று கேளுங்கள். அதுதான் சரியான கேள்வி. எப்போதும் உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்.

மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறதா இல்லையா என்பது உண்மையான கேள்வி அல்ல. மரணத்திற்கு முன் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா இல்லையா என்பதுதான் உண்மையான கேள்வி.

உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது; உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. நீயே யூதாஸ் நீயே இயேசு.

உங்கள் நேர்மை, உங்கள் அன்பு, உங்கள் இரக்கம் உங்கள் உள்ளத்திலிருந்து வர வேண்டும், போதனைகள் மற்றும் வேதங்களிலிருந்து அல்ல.

இந்த உலகின் மிகப் பெரிய அச்சம் மற்றவர்களின் கருத்துகளே. நீங்கள் கூட்டத்திற்கு அஞ்சாத தருணத்திலிருந்து நீங்கள் இனிமேலும் ஒரு செம்மறியாடு இல்லை, நீங்கள் ஒரு சிங்கம் ஆகிறீர்கள். உங்கள் இதயத்தில் ஒரு பெரிய கர்ஜனை எழுகிறது, சுதந்திரத்தின் கர்ஜனை.

எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றத்திற்கே வழிவகுக்கும். எதிர்பார்ப்புகளே விதைகள், மற்றும் எதிர்பார்ப்பு என்பது விரைவிலோ அல்லது பின்னரோ நீங்கள் அறுவடை செய்ய வேண்டிய பயிராகும்.

ஒளியைக் கண்டுபிடியுங்கள், அது உங்களுக்கு பாதையைக் காண்பிக்கும். உங்கள் சொந்த ஒளியால் காட்டப்படும் பாதை மட்டுமே சரியான பாதையாகும்.

ஒப்பீடு என்பது மிகவும் முட்டாள்தனமான அணுகுமுறை, ஏனெனில் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர் மற்றும் ஒப்பிடமுடியாதவர். இந்தப் புரிதல் உங்களில் நிலைபெற்றவுடன், பொறாமை மறைந்துவிடும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News