Murugan Thirukalyanam- நவம்பர் 19ல், முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்

Murugan Thirukalyanam- அருள்மிகு முருக பெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில், முருகன் திருக்கல்யாணம், வரும் நவம்பர் 19ம் தேதி ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.

Update: 2023-10-02 07:18 GMT

 Murugan Thirukalyanam- வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி, முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. (கோப்பு படம்)

Murugan Thirukalyanam-முருகன் திருக்கல்யாணம்

தமிழகத்தில் உள்ள முருகன் திருத்தலங்களில் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. மகா கந்த சஷ்டி விரதம் என்று அழைக்கப்படும் 6 நாள் கந்த சஷ்டி வரும் நவம்பர் 13 ம் தேதி தொடங்கி, 18 ம் தேதி சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, நவம்பர் 19 ம் தேதி முருகன் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறும்.

திருமணம் ஆகாதவர்கள், தெய்வ திருமணங்களை கண்டு வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குறிப்பாக தெய்வ திருமணங்களை பார்த்தால் நமது திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்கின்றனர்.

முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் முருகன்-தெய்வானை திருமண வைபவம் நடைபெறும். கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தோடு முடிந்து விடுவதில்லை. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கந்தசஷ்டி விரதத்தின் தொடர்ச்சியாக நவம்பர் 19-ம் தேதி முருகன், தெய்வானை திருக்கல்யாணம் சகல முருகன் ஆலயங்கள் மற்றும் பல ஆலயங்களில் நடைபெறவுள்ளது.

சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் முருகன்-தெய்வானை திருமண வைபவம் நடைபெறும். கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தோடு முடிந்து விடுவதில்லை. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார்.

திருச்செந்தூர் திருக்கல்யாண முறை

இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.

நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடக்கிறது. மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

முருகனுக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் :

கிராமங்களில் திருவிழாவின் போது கன்னி பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். அதுபோல திருச்செந்தூர் தலத்தில் முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடைபெறும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

திருக்கல்யாண வைபவம் :

முருகனின் அறுபடை வீடுகளில் எந்த சமயத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது என்ற முழு விபரத்தை இங்கே காணலாம்.

திருப்பரங்குன்றம் : நவம்பர் 19-ம் தேதி சீர்தட்டு அழைத்தல், திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

திருச்செந்தூர் : நவம்பர் 19-ம் தேதி  சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.

பழனி : நவம்பர் 19- ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும்.

சுவாமிமலை : நவம்பர் 19- ம் தேதி  முருகன், தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

திருத்தணி : நவம்பர்- 19ம் தேதி காலை 10.00 மணிக்கு கல்யாண உற்சவருக்குத் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும்.

பழமுதிர்சோலை : நவம்பர் 19ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

தெய்வீக திருமணங்கள் :

திருமணம் ஆகாதவர்கள், தெய்வ திருமணங்களை கண்டு வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குறிப்பாக தெய்வ திருமணங்களை பார்த்தால் நமது திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்கின்றனர்.

Tags:    

Similar News