நெல்லையப்பர் கோவில் முன்பு மாநகராட்சி சார்பில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நான்கு வாசல்களையும் திறக்கும்படி அமைச்சர் உத்தரவு.

Update: 2021-07-11 04:25 GMT

நெல்லையப்பர்  திருக்கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலை  தமிழக இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் ஆய்வு செய்துகோவிலில் இருக்கும் வடக்கு வாசல், தெற்குவாசல், மேலவாசல் ஆகிய வாசல்களை திறக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.


அதன்படி இன்று காலை 11 மணி அளவில் வாசல்கள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது.  இதனையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி மற்றும் மாநகர நல அலுவலர் ஆலோசனைப்படி சுகாதார அலுவலர் முருகேசன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் சுகாதார பணியாளர்கள் கோயில் வாசல் பகுதியினை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். உடன் சுகாதார மேற்பார்வையாளர் சங்கர் சுகாதாரப் பணியாளர்கள் சேகர் மாரியப்பன் அருணாச்சலம் விஜய் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News