அன்னூர் அருகே மன்னீஸ்வரர் கோவில் விழா புஷ்ப பல்லக்கில் அம்மன் உலா
அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் புஷ்ப பல்லக்கு உலா, விமரிசையாக நடைபெற்றது.
அவினாசி தொகுதிக்கு உட்பட்ட, அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த, 9ம் தேதி, கிராம தேவதை வழிபாட்டுடன் தேர்த்திருவிழா துவங்கியது; 10ம் தேதி கொடியேற்றம் நடந்தது.
கடந்த 13ம் தேதி இரவு, புஷ்ப பல்லக்கில், அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர், கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். 14ம் தேதி விநாயகர், அம்மன், சந்திரசேகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00க்கு பஞ்சமூர்த்திகள் உள்பிரகாரத்தில் உலா வந்தனர்.நேற்று, திருக்கல்யாண உற்சவம், மதியம் அன்னதானம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.