ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14 ம் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில்-தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார்;
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14 ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜைகள் மற்றும் தமிழ் மாதாந்திர பூஜைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆனி மாத பூஜைக்காக வருகிற 14 ம் தேதி மாலை 5.00 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றவுள்ளார். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம் நடைபெறும் தொடர்ந்து சகஸ்ர கலச பூஜையும் நடைபெறும். வரும் 20-ம் தேதி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அன்றிரவு 10.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்அறிவிக்கப்பட்டுள்ளது.