கேரள மாநிலம் அச்சன்கோவிலில் மார்கழி மஹோற்சவ மண்டல பூஜை துவக்கம்

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் மார்கழி மஹோற்சவ மண்டல பூஜை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-12-17 11:59 GMT

அச்சன்கோவிலில் மார்கழி மகோத்சவ மண்டல பூஜையையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் மார்கழி மஹோற்சவ மண்டல பூஜை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் முருகருக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல் கேரள மாநிலத்திலும் ஐயப்ப சுவாமிக்கு அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா,எரிமேலி, பந்தளம், சபரிமலை,என ஆறுபடை கோவில்கள் உள்ளன. இந்த அனைத்து கோவில்களுமே பரசுராமரால் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால் அச்சன்கோவில் தவிர மற்ற அனைத்து கோவில்களிலும் உள்ள சிலைகள் காலப்போக்கில் மறைந்து விட்டன.

இங்குள்ள ஐயப்பன் அரசனாக காட்சி அளிக்கின்றார். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மார்கழி மஹோற்சவ மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக நேற்று சாமியின் தங்க வாள் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கருவூலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.

கோவிலில் மேல் சாந்தி மோகனரு கண்டனரு கொடி மரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். அதனைத் தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தினமும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 25-ம்தேதியும், ஆராட்டு விழா 26 -ம் தேதியும் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவில் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News