அன்பென்ற மழையிலே தோன்றிய அதிரூபனின் பொன்மொழிகள்..
Christian Prayer Quotes in Tamil-பைபிளில் இருந்து தொகுக்கப்பட்ட இந்த சிறந்த பொன்மொழிகள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில், நம்பிக்கை தரும் என்று நம்புகிறோம்.;
Christian Prayer Quotes in Tamil
அன்பையும், நீதியையும், தனிமனித சுதந்திரத்தையும் வலியுறுத்திய இயேசு, கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது என்று போதித்தார். உணவு, உடை பற்றி கவலைப்படாமல் கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டு வாழுமாறு இயேசு கூறுகிறார்.
மனிதரிடம் கடவுள் எதிர்பார்க்கும் வாழ்வியல் நெறிகளைக் கற்றுத் தந்தார். சாதாரண தத்துவ ஞானிகளின் போதனைகளைப் போலன்றி, கடவுளுக்குரிய மேன்மையோடு இயேசுவின் போதனைகள் அமைந்திருந்தன.
இதோ உங்களுக்காக இயேசுவின் பொன்மொழிகள்
'நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்'
நீங்கள் காணாததை நம்புவதே நம்பிக்கை. இந்த விசுவாசத்தின் வெகுமதி, நீங்கள் நம்புவதை காண்பது.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்'
மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நம்பிக்கையில்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் வெற்றியடையாது. நம்பிக்கையுடன் செயலாற்றுவதே வெற்றியில் பாதியை கொடுத்துவிடுகிறது.
உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமையடைவாய். கண் விழித்திரு. திருப்தியான அளவு உணவு பெறுவாய். உழைப்பாளி குறைவாகச் சாப்பிடுகிறானோ, மிகுதியாகச் சாப்பிடுகிறானோ அவனது உறக்கம் இனிமையானது.
நான் அமைதியாக கீழே படுத்து உறங்குவேன். ஏனெனில், என்னைப் பத்திரமாக வாழச்செய்பவர் கர்த்தர் தான். உன்னைக் காக்கிறவர் உறங்க மாட்டார்.
கர்த்தர் தனக்குப் பிரியமானவனுக்கே உறக்கத்தைத் தருகிறார். நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து, ""கடலில் பெயர்ந்து விழு'' என்றாலும் அப்படியே நடக்கும்.
நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும், உறுதியும் கொண்டிருங்கள். நம்பிக்கை இல்லாத இதயமுள்ளவன் கடவுளை விட்டு விலகியிருக்கிறான். இத்தகைய இதயம் உங்களில் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
உன்னுடைய வாழ்க்கை கதவை அடைத்து விட்டார் என்று கலங்காதே அவர் உனக்காக இன்னொரு ஒரு அற்புதமான கதவை துறக்க போகிறார் என்றுதான் அர்த்தம்.
உன் பிறப்பு மீண்டும் வேண்டும் என்று ஏங்குகிறோம் நாங்கள் இன்று! மீண்டும் நீ பிறக்க வேண்டும், உம்மால் மேலும் மனிதன் சிறக்க வேண்டும்!
புத்திசாலியான மகன் தந்தையை மகிழ்விக்கிறான். ஆனால், புத்தியில்லாத முட்டாளோ தாய்க்குப் பாரமாயிருக்கிறான்.
பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.
கிழட்டு முட்டாள் ராஜாவாய் இருப்பதை விட, புத்திசாலியான ஏழைக் குழந்தையாய் இருப்பது சிறந்தது.
அறிவில்லாத மனிதன் கவுரவம் உள்ளவனாய் இருந்தாலும், அழிந்து போகும் மிருகங்களுக்குச் சமமானவனாயிருக்கிறான்.
விண்ணிலிருந்து வரும் அறிவானது முதலில் தூய்மையானது. பிறகு அமைதியானது. கண்ணியமானது. இணக்கமுள்ளது. நற்கனிகளும், கருணையும் நிறைந்தது. பாரபட்சமோ பாசாங்கோ அதற்கு இல்லை.
ஒருவன் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரைக் கொடுப்பதை விடப் பெரும் அன்பு எவனிடத்திலும் இல்லை.
பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களைச் சபிப்பவரை வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
கண்ணீருடன் விதைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வர்.
மனிதன் எதை விதைக்கிறானோ அதன் விளைச்சலையே அறுவடை செய்வான்.
இயேசுவின் போதனைகள் அனைத்தும் எக்காலத்து மனிதனுக்கும் பொருந்தக்கூடியது ஆகும். அவரது அற்புத வார்த்தைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு.
உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக்கொடு.
ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு. உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
'பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'
உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்
நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போதே செய்.
அன்புள்ள இடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தை துரத்தி விட வல்லது.
கயமை புரியும் ஒவ்வொருவரும் ஒளியை வெறுப்பர்.
செல்வத்திடம் இருக்கும் பேராசைதான் தீமைகள் அனைத்திற்கும் காரணம்.
அன்பான வார்த்தை நிறைய பலன் கொடுக்கும். கோபத்தினால் பயன் ஒன்றும் இல்லை.
நல்ல மரங்கள் நல்ல கனிகளைக்கொடுக்கும். நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர்.
நான் உங்களுக்குக் கொடுக்கும் புதிய கட்டளை: ஒருவரை ஒருவர் நேசிக்கவும். நான் உன்னை நேசித்தது போல் நீங்களும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும்.
ஏழைகளாக இருப்பவர்களை கடவுள் ஆசீர்வதிக்கிறார் மற்றும் அவரின் தேவையை உணர்கிறார், ஏனென்றால் பரலோகராஜ்யம் அவர்களுடையது இயேசு, மத்தேயு 5: ௩
மக்கள் உங்களை கேலி செய்து துன்புறுத்தும் போதும் உங்களைப் பற்றி பொய் சொல்லும்போதும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், ஏனெனில் நீங்கள் என்னைப் பின்பற்றுபவர்கள்
நாளை பற்றி கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் நாளை அதன் சொந்த கவலையை ஏற்படுத்தும். இன்றைய பிரச்சனை இன்றைக்கு போதும். இயேசு, மத்தேயு 6:34
நீங்கள் பரிபூரணமாக இருக்க விரும்பினால், உங்கள் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்போது உங்களுக்கு சொர்க்கத்தில் புதையல் இருக்கும்.
எந்த ஒரு காரியத்திலும் நீ பொறுமையாக இரு ஏனெனில் பொறுமை இருக்கும் இடத்தில் தான் கர்த்தர் என்றும் குடியிருப்பார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2