குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் கணிக்கலாமா?

New Born Baby Jathagam -குழந்தை பிறந்தவுடன் எப்போது ஜாதகம் கணிக்க வேண்டும், எப்போது ஜாதக பலன்களை பார்க்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்;

Update: 2022-09-01 15:03 GMT

New Born Baby Jathagam -ஒவ்வொருவரின் வீட்டில் குதூகலத்தை அளிக்கக் கூடியது குழந்தை செல்வம். குழந்தை பிறந்ததும் நாம் பிறந்த நேரத்தை சரியாக குறித்து வைத்துக் கொள்வது அவசியம். அதை வைத்து ஜாதகத்தை கணித்துக் கொள்ளவும்.

குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் பெற்றோர், குடும்பத்தில் பெரியோர் குழந்தை பிறந்த நேரத்தை சரியாக குறித்து வைத்துக் கொண்டு நட்சத்திரத்தையும், ராசியை குறிக்கும் முறைப்படி ஜாதகம் எழுதக் கூடியவர்களிடம் கூறி ஜாதக குறிப்பை பெறவும். இந்த ஜாதக குறிப்பு குழந்தையின் வாழ்நாள் முழுவதும் மிக முக்கியமானது.

ஜோதிட சாஸ்திரப்படி குழந்தை கருவில் இருக்கும் போதே, அதன் 3 மாதங்களிலிருந்து அந்த குழந்தைக்கான ஜாதக பலன் தொடங்கிவிடும் என்கிறது.

குழந்தை பிறந்தவுடன் அதன் ஜாதகத்தைப் பார்ப்பது தவறு, குறைந்த பட்சம் குழந்தைக்கு 3 வயது பூர்த்தி ஆன பின்னரே ஜாதகத்தைப் பார்க்க வேண்டும்.

சில நேரங்களில் குழந்தை பிறந்தவுடன் குடும்பம், வேலை, தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு நேர்மாறாக துன்பத்தைக் கொடுக்கக்கூடிய ஜாதகமாக அமையலாம். அதனால் ஜாதகத்தைப் பார்த்து குழந்தை மீதான அன்பு குறைந்துவிட கூடாது என்பதற்காக பெரியவர்கள் இப்படி குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கான ராசி, நட்சத்திரம், குழந்தையின் ஆரோக்கியம், பெற்றோர், தாத்தா, பாட்டி, தாய்மாமன் ஆகியோரின் ஆரோக்கிய நிலையை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

குறைந்தபட்சம் குழந்தைக்கு 12 வயது பூர்த்தி அடைந்த பிறகு, குழந்தை எந்த கல்வியில் சிறந்து விளங்கும் ?. என்ன படிப்பு சரியாக இருக்கும். தொழில் அல்லது வேலை இதில் எதை தேர்ந்தெடுக்கலாம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

அதே போல பிள்ளை வளர்ந்து மண வாழ்க்கைக்கு தயாராகும் போது 20 வயதுக்கு மேல், பிள்ளைக்கு செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், நாக தோஷம், திருமண கால தாமதம் குறித்து ஜாதகத்தை வைத்து பார்க்க வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News