ஜாதகம் எப்படி கணிக்கிறாங்க? எந்த கட்டத்துக்கு என்ன பலன்? பாக்கலாம் வாங்க jathagam by date of birth
உங்களுடைய பிறந்த தேதி , பிறந்த நேரம் , பிறந்த ஊர் தெரிந்து இருந்தால் உங்களுடைய ஜாதகத்தை பார்ப்பது மிகவும் எளிது.;
ஜாதகம் என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கைத் திட்டம். நம் அனைவருக்கும் ஒரு ஜாதகம் உள்ளது, இது நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவும்.
கிரகங்களின் தொடர்ச்சியான இயக்கம் காரணமாக, ஒரு நபர் பிறந்த போது அமையும் கிரகங்களின் அமைப்பை பொறுத்து, அவரது சரியான தேதி, நேரம் மற்றும் அவர் பிறந்த இடத்தை பொறுத்து அவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது.
உங்களுடைய பிறந்த தேதி , பிறந்த நேரம் , பிறந்த ஊர் தெரிந்து இருந்தால் உங்களுடைய ஜாதகத்தை பார்ப்பது மிகவும் எளிது.
ஜாதக கட்டங்களில் இருக்கும் 12 கட்டங்கள் தான் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் மொத்த ரகசியத்தையும் எடுத்துரைக்கிறது. ஒருவர் எப்படிபட்டவர்? அவரது வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்க போகிறவை என முக்காலத்தையும் சொல்கிறது.
9 கிரகங்களில் நல்ல கிரகங்கள், தீய கிரகங்கள் என்று பிரிக்கபட்டிருக்கும். அதில் நல்ல கிரகம் அமைந்திருக்கும் கட்டம், அந்த கட்டத்தை பார்வையிடும் கிரகத்தின் தன்மையை பொறுத்தே பலன்கள் இருக்கும்.
மேலும் கட்டத்தின் ராசியாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார்? என்பதும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டால் தான் சுலபமாக இருக்கும். ஒருவர் செய்த பாவ, புண்ணிய பலன்கள் அடிப்படையில் ஜாதகம் அமைய பெற்றிருக்கும்.
அவற்றில் எந்த கட்டத்தில் எந்த கிரகம் அமர்ந்தால் எதை பற்றிய ரகசியத்தை கூற முடியும் என்பதை குறித்த அடிப்படை ஜோதிடத்தை இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.
கட்டம் 1 :
ஒருவரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் ல/ என்று போடபட்டிருக்கும் லக்ன கட்டம் தான் முதல் வீடு ஆகும். ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் மற்றும் ஆளுமை திறன், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை சார்ந்தவற்றை குறித்து காட்டுகிறது.
கட்டம் 2 :
ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் கட்டம் என்பது குடும்பம், வாக்கு, தனம் ஆகியவற்றை குறிக்கிறது.
கட்டம் 3 :
மூன்றாம் கட்டம் என்பது உங்களுக்கு அடுத்து பிறக்கும் சகோதரம், தைரியம், வெற்றி, அண்டை வீட்டார், பயணம், தகவல் தொடர்பு, இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை பற்றி சொல்லிவிடும்.
கட்டம் 4 :
நான்காம் கட்டம் தாயாரை குறிக்கும். கல்வி, வீடு, வாகனம், சொத்துக்கள், பொது வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும்.
கட்டம் 5 :
ஐந்தாம் கட்டமானது புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகும்.
கட்டம் 6 :
ஆறாம் கட்டம் நோய், கடன், தாய் மாமன், கவலைகள், தொழில், எதிரிகள் போன்றவற்றை குறிக்கும்.
கட்டம் 7 :
ஏழாம் கட்டமானது திருமணம், வியாபாரம், மரணம் போன்றவற்றை குறிப்பன.
கட்டம் 8 :
எட்டாம் கட்டம் ஆயுள், அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கும்.
கட்டம் 9 :
ஒன்பதாம் கட்டம் தந்தையை குறிக்கும்.
கட்டம் 10 :
பத்தாம் கட்டம் கர்மஸ்தானம் ஆகும். கௌரவம், ஜீவனம், மரியாதை, கண்ணியம், புகழ், பதவி போன்றவற்றை குறிப்பது.
கட்டம் 11 :
பதினோராம் கட்டம் லாபஸ்தானம் ஆகும்.
கட்டம் 12 :
பணிரெண்டாம் கட்டம் விரயம், நஷ்டம், ஜெயில் தண்டனை, மறைமுக எதிரிகள் போன்றவற்றை குறிக்கும்.