திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உண்டியல் திறப்பு
சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உண்டியல் வசூல் ரூ 79,19,155/- ரூபாய் மற்றும் 675 கிராம் தங்கம், 6245 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 79லட்சத்து ,19 ஆயிரத்து ,155/- ரூபாய் மற்றும் 675 கிராம் தங்கம் 6245 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்துவிட்டு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். காணிக்கையாக பெற்றதை கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, திருவள்ளூர் உதவி ஆணையர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணினர். கடந்த 30 நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் உண்டியலில், 79 லட்சத்து 19ஆயிரத்து 155 லட்சம் ரூபாய் ரொக்கம், 675 கிராம் தங்கம் 6245 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தியதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.