இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நில விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு

முதற்கட்டமாக 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விபரங்கள்- சென்னையில்4,கோவை,திருச்சியில் 5 என 47 கோயில்களின் நில விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2021-06-09 04:26 GMT

 இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நில விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு.முதற்கட்டமாக 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சேகர் பாபு, அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவிட்டடார். அத்துடன் கோயில் நிலங்கள், கட்டிடங்கள் விவரங்களை மக்கள் பார்வையிடும் வகையில் இணையத்தில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் , வாடகை வசூல் அளித்தல் ஆகியவற்றை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.



இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நில விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் நில ஆவணங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கோயில்களின் 72% நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில் முதல் கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில்களின் நிலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் ஆவணங்களை வெளியிட்டது தமிழக அரசு. சென்னையில் 4, கோவை, திருச்சியில் 5 என 47 கோயில்களின் நில விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருக்கோயில்கள் நிலங்கள் பட்டியல்..

https://hrce.tn.gov.in/hrcehome/land_search.php?activity=land_search

Tags:    

Similar News