Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

செப்டம்பர் 29, 2024 ஞாயிற்றுக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-09-29 01:44 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் புரட்டாசி மாதம் - 13

29.09-2024 ஞாயிற்றுக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வர்ஷ ருதௌ.

மாதம் - புரட்டாசி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - மாலை 07.15 pm வரை துவாதசி திதி பிறகு திரயோதசி திதி

நக்ஷத்திரம் - காலை 07.09 am வரை ஆயில்யம் பிறகு மகம்

யோகம்- காலை 06.02 am வரை, மரணயோகம் காலை 07.09am வரை சித்த யோகம்,

நாள் முழுவதும் மரண யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 03.15 PM - 04.15 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM -11.45 AM, 01.30 PM - 02.30 PM

ராகு காலம் - 04.30 PM- 06.30 PM .

எமகண்டம் - 12.00 PM- 01.30 PM.

குளிகை - 03.00 PM - 04.30 PM.

சூரிய உதயம். - காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 05.59 PM.

சந்திராஷ்டமம் - அதிகாலை 07.09 am வரை பூராடம் பிறகு உத்திராடம்

இன்றைய (29-09-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். நிர்வாக துறைகளில் மதிப்பு மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். இலக்கியப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்களிடத்தில் நிதானம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

அஸ்வினி : மதிப்புகள் மேம்படும்.

பரணி : ஈடுபாடு ஏற்படும்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரோகிணி : லாபகரமான நாள்.

மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : ஆதரவுகள் கிடைக்கும்.

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

கடக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கூடும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். ஆபரண சேர்க்கை உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களுடன் அனுகூலம் உண்டாகும். குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மதிப்புகள் கூடும்.

பூசம் : அனுகூலம் உண்டாகும்.

ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நிதி தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மகம் : வாதங்களை தவிர்க்கவும்.

பூரம் : அறிமுகம் ஏற்படும்.

உத்திரம் : அனுபவங்கள் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் கோபமின்றி செயல்படவும். மற்றவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை : அலைச்சல்கள் மேம்படும்.

துலாம் ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியர்களுக்குள் நெருக்கம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமான விஷயங்களுக்கு முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி : நெருக்கம் ஏற்படும்.

விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

உடனிருப்பவர்கள் பற்றியும், உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாயப்புகள் அமையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : புரிதல் மேம்படும்.

அனுஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கேட்டை : வரவுகள் கிடைக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

தொழில் நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதில் புதிய தேடல் பிறக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மூலம் : முயற்சிகள் ஈடேறும்.

பூராடம் : தேடல்கள் பிறக்கும்.

உத்திராடம் : ஆதரவான நாள்.

மகர ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

எதிலும் திட்டமிட்டு செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடாமல் இருக்கவும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : திட்டமிட்டு செயல்படவும்.

திருவோணம் : ஏற்ற, இறக்கமான நாள்

அவிட்டம் : நெருக்கடியான ஏற்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி பிறக்கும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தேவைக்கேற்ப வரவுகள் உண்டாகும். வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சி பிறக்கும்.

சதயம் : ஆதாயகரமான நாள்.

பூரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 29, 2024

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு வந்த தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். இரக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

ரேவதி : இழுபறிகள் மறையும்.

Tags:    

Similar News