Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

செப்டம்பர் 14, 2024 சனிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-09-14 01:37 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆவணி மாதம் - 29

14.09-2024 சனிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வர்ஷ ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - மாலை 05.05 pm வரை ஏகாதசி திதி பிறகு - துவாதசி திதி

நக்ஷத்திரம் - மாலை 05.57 pm வரை உத்திராடம் பிறகு - திருவோணம்

யோகம்- நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM-11.45 AM, 09.30 PM-10.30 PM

ராகு காலம் - 09.00 AM- 10.30 AM .

எமகண்டம் - 01.30 PM- 03.00 PM.

குளிகை - 06.00 AM - 07.30 AM.

சூரிய உதயம். -காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.11 PM.

சந்திராஷ்டமம் - மாலை 05.57 pm வரை மிருகசீரிஷம் பிறகு -திருவாதிரை

இன்றைய (14-09-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சில விஷயங்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.

பரணி : அனுபவம் வெளிப்படும்.

கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேவை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். கல்வி பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டாகும். விவசாயப் பணிகளில் கவனம் வேண்டும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரோகிணி : ஆர்வமின்மை உண்டாகும்.

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.

மிதுன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களிடம் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டு தொடர்பான செயல்களில் பொறுமை வேண்டும். எண்ணிய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புதிய மின்னணு, மின்சார சாதனங்களில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.

திருவாதிரை : பொறுமை வேண்டும்.

புனர்பூசம் : சோர்வுகள் உண்டாகும்.

கடக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் சாதகமாகும்.

பூசம் : மேன்மை உண்டாகும்.

ஆயில்யம் : அறிமுகங்கள் ஏற்படும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

ரகசியமான சில விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனை திறனில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மயில்நீல நிறம்

மகம் : ஆதாயகரமான நாள்.

பூரம் : சாதகமான நாள்.

உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வெளியூர் பயணங்களில் சிந்தித்துச் செயல்படவும். சிந்தனைகளில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். கலை துறைகளில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். பாரம்பரிய விஷயங்களை பற்றிய புரிதல் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்

உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.

அஸ்தம் : அனுபவம் மேம்படும்.

சித்திரை : புரிதல்கள் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு பணி நிமித்தமான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். பலம், பலவீனத்தை உணர்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : ஆதாயம் ஏற்படும்.

சுவாதி : விவேகம் வேண்டும்.

விசாகம் : ஆதரவுகள் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். இசை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

விசாகம் : புதுமையான நாள்.

அனுஷம் : மாற்றம் ஏற்படும்.

கேட்டை : ஒத்துழைப்பான நாள்.

தனுசு ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

வாக்கு சாதுரியம் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். அனுபவப்பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மூலம் : ஏற்ற, இறக்கமான நாள்.

பூராடம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.

உத்திராடம் : நம்பிக்கை மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தக செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். கருத்துகளை கூறும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

உத்திராடம் : தாமதம் ஏற்படும்.

திருவோணம் : வரவுகள் கிடைக்கும்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

கும்ப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

சம வயதினர் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான முதலீடுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத திடீர் பயணங்கள் மூலம் நெருக்கடிகள் தோன்றி மறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அவிட்டம் : மாற்றமான நாள்.

சதயம் : முதலீடுகள் மேம்படும்.

பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.

மீன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 14, 2024

சமயோசிதமான செயல்பாடுகளின் மூலம் வளர்ச்சி அடைவீர்கள். உயர் கல்வியில் மேன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : மேன்மை ஏற்படும்.

உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரேவதி : ஆதரவான நாள்.

Tags:    

Similar News