Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

செப்டம்பர் 10, 2024 செவ்வாய்'கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-09-10 02:08 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆவணி மாதம் - 25

10.09-2024 செவ்வாய்க்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வர்ஷ ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - இரவு 07.10 pm வரை ஸப்தமி திதி பிறகு - அஷ்டமி திதி

நக்ஷத்திரம் - மாலை 05.13 pm வரை அனுஷம் பிறகு - கேட்டை

யோகம்- நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM-11.45 AM, 07.30 PM-08.30 PM

ராகு காலம் - 03.00 PM- 04.30 PM .

எமகண்டம் - 09.00 AM- 10.30 AM.

குளிகை - 12.00 PM - 01.30 PM.

சூரிய உதயம். - காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.13 PM.

சந்திராஷ்டமம் - மாலை 05.13 pm வரை அஸ்வினி பிறகு பரணி

இன்றைய (10-09-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

எதிலும் கோபமின்றி செயல்படவும். வர்த்தகப் பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். புதிய கண்ணோட்டம் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். முக்கியமான வேலைகளை மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செய்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

அஸ்வினி : கோபமின்றி செயல்படவும்.

பரணி : சேமிப்புகள் குறையும்.

கிருத்திகை : ஆர்வமின்மையான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

சுபகாரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்

கிருத்திகை : வெற்றிகரமான நாள்.

ரோகிணி : தன்னம்பிக்கை பிறக்கும்.

மிருகசீரிஷம் : அறிமுகங்கள் கிடைகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.

புனர்பூசம் : சுறுசுறுப்பான நாள்.

கடக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

புதுவித பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : தெளிவுகள் ஏற்படும்.

பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

ஆயில்யம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

எதிர்பாராத பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். சுப முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு செயல்பாடுகளில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் : முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

விலை உயர்த்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். அடிப்படை கல்வியில் முனேற்றமான வாய்ப்புகள் அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : வரவுகள் உண்டாகும்.

அஸ்தம் : வாய்ப்புகள் அமையும்.

சித்திரை : முடிவுகள் கிடைக்கும்.

துலாம் ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

விசாகம் : கலகலப்பான நாள்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். எண்ணியதை வித்தியாசமான முறையில் நிறைவேற்றுவீர்கள். விற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : புரிதல் ஏற்படும்.

அனுஷம் : மாற்றமான நாள்.

கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

பெரிய முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பணிகளில் இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : சிந்தித்துச் செயல்படவும்.

பூராடம் : முயற்சிகள் கைகூடும்.

உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

மகர ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

சிகை அலங்கார பணிகளில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற வாதங்களினால் விரயங்கள் நேரிடும். மனதில் அந்நிய தேச பயணம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : லாபம் உண்டாகும்.

திருவோணம் : விரயங்கள் நேரிடும்.

அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.

கும்ப ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். சவாலான வாதங்களையும் சமாளிப்பீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேளாண்மை துறைகளில் ஆலோசனைகள் மூலம் தெளிவு பிறக்கும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : வாதங்களை சமாளிப்பீர்கள்.

சதயம் : லாபங்கள் மேம்படும்.

பூரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் செப்டம்பர் 10, 2024

செல்வச் சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விவேகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

Tags:    

Similar News