Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
அக்டோபர் 12, 2024 சனிக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்;
பஞ்சாங்கம் - குரோதி வருடம் புரட்டாசி மாதம் - 26
12.10-2024 சனிக்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - தக்ஷிணாயணம் .
ருது - வருஷ ருதௌ.
மாதம் - புரட்டாசி மாதம்
பக்ஷம்- சுக்லபக்ஷம்
திதி - காலை 06.08 am வரை நவமி திதி பிறகு -தசமி திதி
நக்ஷத்திரம் - அதிகாலை 01.42 am வரை உத்திராடம் பிறகு -திருவோணம்
யோகம்-அதிகாலை 01.42 am வரை சித்த யோகம் காலை 06.01am வரை மரண யோகம், பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்
நல்ல நேரம் - 10.45 AM - 11.45 AM, 04.45 PM - 05.45 PM
கௌரி நல்ல நேரம் 12.15 AM -01.15 AM, 09.30 PM - 10.30 PM
ராகு காலம் - 09.00 AM- 10.30 AM .
எமகண்டம் - 01.30 PM- 03.00 PM.
குளிகை - 06.00 AM - 07.30 AM.
சூரிய உதயம். - காலை 05.59 AM.
சூரிய அஸ்தமனம் - மாலை 05.51 PM.
சந்திராஷ்டமம் - அதிகாலை 01.42 am வரை மிருகஷிரிஷம் பிறகு திருவாதிரை
இன்றைய (12-10-2024) ராசி பலன்கள்
மேஷ ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
கனிவான பேச்சுக்கள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். சுய தொழிலில் லாபகரமான சூழல் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மேன்மையான நாள்.
பரணி : வாய்ப்புகள் கைகூடும்.
கிருத்திகை : ஈடுபாடு ஏற்படும்.
ரிஷப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கைமாற்றாக கொடுத்திருந்த பணம் கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விற்பனை பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.
ரோகிணி : அலைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : போட்டிகள் அதிகரிக்கும்.
மிதுன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : மாற்றம் பிறக்கும்.
புனர்பூசம் : விரயங்கள் ஏற்படும்.
கடக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்ளவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
பூசம் : நெருக்கடிகள் குறையும்.
ஆயில்யம் : ஆதரவுகள் கிடைக்கும்.
சிம்ம ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். வாக்குறுதி கொடுக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். யோகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : ஒற்றுமை உண்டாகும்.
பூரம் : புரிதல்கள் மேம்படும்.
உத்திரம் : மேன்மையான நாள்.
கன்னி ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்கள் மூலம் எதிர்பாராத விரயம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளுடன் என்று கூறினார் பரவால்ல இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
துலாம் ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் வெளியூர் தொடர்பு மூலம் நன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
சித்திரை : லாபங்கள் மேம்படும்.
சுவாதி : நன்மைகள் உண்டாகும்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
விருச்சிக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
எந்த ஒரு செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவியால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
விசாகம் : இன்னல்கள் குறையும்.
அனுஷம் : அனுபவம் மேம்படும்.
கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தனுசு ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். பணிகளில் சாதகமற்ற சூழல் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்
மூலம் : சிந்தனைகள் பிறக்கும்.
பூராடம் : வரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
மகர ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். புதிய செயல்களை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்துச் செயல்படுவது அவசியம். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : புரிதல் மேம்படும்.
அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
கும்ப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
வங்கி தொடர்பான உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் நல்ல மாற்றம் உண்டாகும். உபரி வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : ஆர்வமின்மையான நாள்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.
மீன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 12, 2024
தாராளமான தனவரவுகள் உண்டாகும். பணியாளர்களுக்கு செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபாரப் பணிகளில் பொருளாதார உயர்வு உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வமின்மை குறையும்.
ரேவதி : உயர்வு உண்டாகும்.