Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அக்டோபர் 01, 2024 செவ்வாய்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-10-01 01:43 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் புரட்டாசி மாதம் - 15

01.10-2024 செவ்வாய்க்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - வருஷ ருதௌ.

மாதம் - புரட்டாசி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - இரவு 10.34 pm வரை சதுர்த்தசி திதி பிறகு- அமாவாசை திதி

நக்ஷத்திரம் - காலை 11.15 am வரை பூரம் பிறகு உத்திரம்

யோகம்- காலை 11.15 am வரை சித்த யோகம் பிறகு நாள் முழுவதும் அமிர்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM -11.45 AM, 07.30 PM - 08.30 PM

ராகு காலம் - 03.00 PM- 04.30 PM .

எமகண்டம் - 09.00 AM- 10.30 AM.

குளிகை - 12.00 PM - 01.30 PM.

சூரிய உதயம். - காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 05.59 PM.

சந்திராஷ்டமம் - காலை 11.15 am வரை உத்திராடம் பிறகு அவிட்டம்

இன்றைய (01-10-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் மாற்றமான அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். அரசு காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தடைகள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.

பரணி : அனுபவம் ஏற்படும்.

கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்கள் செய்வது குறித்த சிந்தனைகள் மேம்படும். பயணங்களால் அலைச்சலும், அறிமுகமும் ஏற்படும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரோகிணி : மாற்றமான நாள்.

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கால்நடை தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நம்பிக்கை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

திருவாதிரை : சிந்தித்துச் செயல்படவும்.

புனர்பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.

கடக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் வழியில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : நம்பிக்கை உண்டாகும்.

பூசம் : ஒத்துழைப்பான நாள்.

ஆயில்யம் : மேன்மையான நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பேச்சுத் திறமையால் லாபம் அதிகரிக்கும். பொன், பொருட்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விளையாட்டுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

மகம் : லாபகரமான நாள்.

பூரம் : மாற்றமான நாள்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துகளில் கவனம் வேண்டும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

சித்திரை : ஆர்வம் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

சித்திரை : சேமிப்புகள் குறையும்.

சுவாதி : அனுபவம் ஏற்படும்.

விசாகம் : ஆர்வம் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழில் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆன்மிகப் பணிகளில் புரிதல் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : தெளிவு பிறக்கும்.

அனுஷம் : லாபகரமான நாள்.

கேட்டை : புரிதல் ஏற்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மூலம் : ஆதாயம் உண்டாகும்.

பூராடம் : அனுபவம் ஏற்படும்.

உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

பலதரப்பட்ட மக்களின் தொடர்பு ஏற்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : மதிப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.

அவிட்டம் : தேடல் அதிகரிக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நேரம் தவறி உணவு உண்பதை குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சதயம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

மீன ராசிக்கான பலன்கள் அக்டோபர் 1, 2024

சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சக மாணவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழகும் விதங்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாழ்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

பூரட்டாதி : குழப்பங்கள் குறையும்.

உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரேவதி : அறிமுகங்கள் ஏற்படும். 

Tags:    

Similar News