Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய அக்டோபர் 29, 2023 ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்

Update: 2023-10-29 03:50 GMT

பைல் படம்.

மேஷம்:

சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்வீர்கள். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

ரிஷபம்:

மனதில் ஏதேனும் கவலை, பயம் ஏற்படும். உங்களது பேச்சே எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். அலைச்சலை சந்திக்க நேரிடும்..

மிதுனம்:

தொழில் வியாபாரத்தில் லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும்..

கடகம்:

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.

சிம்மம்:

ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

கன்னி:

மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் மேலோங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும்..

துலாம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்.

தனுசு:

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

மகரம்:

யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும்

கும்பம்:

காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து கூடும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

மீனம்:

ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும்

Tags:    

Similar News