Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய அக்டோபர் 25, 2023 புதன்கிழமை ராசி பலன்கள்;

facebooktwitter-grey
Update: 2023-10-25 01:18 GMT
Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

பைல் படம்.

  • whatsapp icon

மேஷம்:

காரியதடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய நபர்கள் அறிமுகத்தால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்:

எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனதைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதிப்பு நீங்கும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.

மிதுனம்:

காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில், வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது நல்லது.

கடகம்:

தொழில் வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். திறமையாக செயல்பட்டாலும் விமர்சனம் எழும்.

சிம்மம்:

திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

கன்னி:

மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணியில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

துலாம்:

பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். இடையூறுகள் விலகும். தர்ம குணமும், இரக்க சிந்தனையும் மேலோங்கும். லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும்.

விருச்சிகம்:

கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு:

அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

மகரம்:

கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கும்பம்:

கல்வி தொடர்பான செலவு கூடும். எதிர்ப்புகள் அகலும். ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்புவீர்கள். வீண் மன குழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

Tags:    

Similar News