Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
நவம்பர் 4, 2024 திங்கட்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்;
பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஐப்பசி மாதம் - 18
04.11-2024 திங்கட்கிழமை
வருடம் - குரோதி வருடம்
அயனம் - தக்ஷிணாயணம் .
ருது -ஸரத் ருதௌ.
மாதம் - ஐப்பசி மாதம்
பக்ஷம்- சுக்ல பக்ஷம்
திதி - இரவு 10.11 PM வரை திருதியை திதி பிறகு சதுர்த்தி திதி
நக்ஷத்திரம் - காலை 07.57 am வரை அனுஷம் பிறகு -கேட்டை
யோகம்- காலை 06.03am வரை மரண யோகம் பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்
நல்ல நேரம் - 06.15 AM - 07.15 AM, 04.45 PM - 05.45 PM
கௌரி நல்ல நேரம் 09.15 AM -10.15 AM, 07.30 PM - 08.30 PM
ராகு காலம் - 07.30 AM- 09.00 AM .
எமகண்டம் - 10.30 AM- 12.00 PM.
குளிகை - 01.30 PM - 03.00 PM.
சூரிய உதயம். - காலை 06.04 AM.
சூரிய அஸ்தமனம் - மாலை 05.41 PM.
சந்திராஷ்டமம் - காலை 07.57 am வரை அஸ்வினி பிறகு பரணி
இன்றைய (04-11-2024) ராசி பலன்கள்
மேஷ ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லவும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்படவும். வாழ்க்கைத் துணை வழியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : பொறுமையுடன் செயல்படவும்.
கிருத்திகை : அலைச்சல் ஏற்படும்.
ரிஷப ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மன வருத்தங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வர்த்தகச் செயல்களில் புதிய அனுபவம் ஏற்படும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : முடிவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : செல்வாக்குகள் அதிகரிக்கும்.
மிதுன ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான நிலைகள் மறையும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : இழுபறிகள் மறையும்.
கடக ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நயமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
புனர்பூசம் : ஆதாயம் கிடைக்கும்.
பூசம் : வாதங்கள் மறையும்.
ஆயில்யம் : பொறுப்புகள் குறையும்.
சிம்ம ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
மாமன் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : ஆதரவுகள் மேம்படும்.
பூரம் : ஆர்வம் ஏற்படும்.
உத்திரம் : அனுகூலமான நாள்.
கன்னி ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். சகோதரர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். திட்டங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.
அஸ்தம் : ஒத்துழைப்பு மேம்படும்.
சித்திரை : ஆதரவான நாள்.
துலாம் ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
தாய்வழி உறவுகளால் ஆதரவான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவரிடம் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனமகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : மதிப்புகள் கிடைக்கும்.
விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
விருச்சிக ராசிக்கான பலன்கள்நவம்பர் 4, 2024
கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். தோற்றங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பயணங்களின் மூலம் சிந்தனைப் போக்கில் சில தெளிவுகள் பிறக்கும். உத்தியோகத்தில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்
விசாகம் : இன்னல்கள் மறையும்.
அனுஷம் : நெருக்கடிகள் குறையும்.
கேட்டை : அனுபவம் கிடைக்கும்.
தனுசு ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
எதிர்பாராத சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் கைகூடும். சினம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : நெருக்கடிகள் நீங்கும்.
பூராடம் : புரிதல்கள் உண்டாகும்.
உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.
மகர ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
மனதில் நினைத்த காரியங்கள் சுமூகமாக முடியும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சவாலான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
கும்ப ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதுவிதமான சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சமூகப் பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.
சதயம் : வெற்றிகரமான நாள்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
மீன ராசிக்கான பலன்கள் நவம்பர் 4, 2024
திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். வெளி வட்டார பணிகளில் அலைச்சல் ஏற்படுவதுடன் புதிய அனுபவம் உண்டாகும். ஆராய்ச்சி துறைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
உத்திரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.
ரேவதி : மாற்றமான நாள்.