Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய நவம்பர் 26, 2023 ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்;

facebooktwitter-grey
Update: 2023-11-26 02:02 GMT
Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  • whatsapp icon

மேஷம்:

புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். மிகவும் நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

ரிஷபம்:

பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். குடும்பத்தில் வசதிகள் தொடரும். ஆடம்பர பொருட்கள் சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். சற்று முயற்சி எடுத்தால் சாதனைகள் செய்யலாம்.

மிதுனம்:

குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தாலும் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். பல்வேறு நன்மைகள் நிகழும். உங்கள் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். பொருள் விரயமும், வேலையில் சுணக்கமும் ஏற்படலாம்.

கடகம்:

வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை.

சிம்மம்:

சிலர் வீடு வாங்குவீர்கள். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

கன்னி:

பணப்புழக்கம் சீராக இருக்கும். சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும் போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். அப்படி போட்டால் பிரச்சனைகள் வரலாம்.

துலாம்:

உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்:

எந்த பிரச்சனையானாலும் மனம் விட்டு பேசி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மூன்றாம் மனிதரின் தலையீடு வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளுக்கும் இடம் கொடுங்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடல்நிலையிலும் அக்கறை செலுத்தவும்.

தனுசு:

உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதை முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரயம் ஆகலாம்.

மகரம்:

சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.

கும்பம்:

உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதித்து நடப்பார்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது.

மீனம்:

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். விட்டு கொடுத்து போவது நல்லது. நண்பர்கள் உதவிகள் செய்வர். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும்.

Tags:    

Similar News