Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் மார்ச் 2 2024 சனிக்கிழமை ராசி பலன்கள்

Update: 2024-03-02 02:51 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம்: - மாசி : 19:-

02 - 03- 2024. சனிக்கிழமை.

வருடம்:- சோபகிருது:

அயனம்:- உத்தராயணம்

ருது:- சிசிர- ருதெள.

தம்; - மாசி:-

பக்ஷம்:- கிருஷ்ண  பக்ஷம்:-    தேய்பிறை.

திதி:- சஷ்டி- அதிகாலை: 04.22 வரை, பின்பு ஸப்தமி.

நக்ஷத்திரம்:- விசாகம்:- முற்பகல்: 11.14. வரை, பின்பு அனுஷம்.

அமிர்தாதி- யோகம்:- இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை: - 07.30 - 08.30 AM. மாலை: - 05.00 - 06.00 PM.

கௌரி நல்ல நேரம்: பகல் :- 10.30 - 11.30 AM.இரவு :- 09.30 - 10.30 PM.

ராகு- காலம்:

காலை: - 09.00 - 10.30 AM.

எமகண்டம்: பிற்பகல்: - 01.30 - 03.00 PM.

குளிகை: காலை: - 06.00 - 07.30 AM.

( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து  அனுசரித்து செய்யவும்.)

சூரிய- உதயம்: காலை: 06.28 AM.

சூரிய- அஸ்தமனம்:   மாலை: 06.10 PM.

சந்திராஷ்டம - நட்சத்திரம்:    ரேவதி, - அஸ்வினி.

இன்றைய ராசிபலன் - 2 மார்ச் 2024


மேஷம்:

  • பிரிந்தவர்கள் நினைவு வந்து துன்பம் தரும்.
  • வேலையில் சக ஊழியர்களுடன் இணக்கமாக போகவும்.
  • கணவன் மனைவி இடையே சின்ன சின்ன சண்டைகள் வரும்.
  • எதிர்பாராத செலவுகள் அதிகம்.
  • கால்நடை வளர்ப்பில் கவனம் தேவை.
  • நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும்.
  • அலுவலக வேலைகளில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
  • அமைதியாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்


ரிஷபம்:

  • திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
  • தொழில்நுட்ப கருவிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.
  • வேலையில் சாதகமான পরিস্থிதி உருவாகும்.
  • மனதில் இருந்த தடுமாற்றங்கள் விலகும்.
  • போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
  • நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்


மிதுனம்:

  • வருமானம் சீராகும்.
  • பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும்.
  • நெருங்கியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
  • வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும்.
  • எதிர்பாலினத்தால் ஆதாயம் பெறுவீர்கள்.
  • வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும்.
  • வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை நிறம்


கடகம்:

  • மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்.
  • பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
  • வெளி உணவுகளை தவிர்க்கவும்.
  • தியானம் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
  • வியாபாரத்தில் புதிய நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள்.
  • கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • பரிவுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்


சிம்மம்:

  • பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும்.
  • தள்ளிப்போன காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும்.
  • முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்.
  • அரசு சார்ந்த பணிகளில் தாமதம் நீங்கும்.
  • சேமிப்பில் கவனம் தேவை.
  • இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
  • புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்


கன்னி:

  • செயல்பாடுகளில் தாமதம் நீங்கும்
  • உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • நண்பர்கள் மூலம் வருமான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • அரசு காரியங்களில் வெற்றி.
  • சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகள் செய்யவும்.
  • பெரியோர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
  • மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
  • வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நிறம்: ஆகாய நீல நிறம்


துலாம்:

  • மனக்குழப்பங்கள் நீங்கும்.
  • கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • கொடுக்கல் வாங்கலில் பொறுமை தேவை.
  • வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
  • உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
  • உங்கள் பெருந்தன்மையால் மதிப்பு உயரும்.
  • விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
  • துன்பம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்


விருச்சிகம்:

  • பதற்றப்படாமல் நிதானமாக செயல்படுங்கள்.
  • மனதில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றும்.
  • உடன் இருப்பவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது.
  • வியாபாரத்தில் தடைகள் சில வந்து நீங்கும்.
  • சக ஊழியர்களுடன் பொறுமையைக் கடைபிடிக்கவும்.
  • சூழ்நிலைக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தவும்.
  • ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்


தனுசு:

  • நினைத்த பணிகளில் தாமதம் ஏற்படலாம்.
  • சகோதரர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
  • திடீர் செலவுகளால் நெருக்கடி வந்து போகும்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டு.
  • எதிர்பாராத பயணங்கள் வரலாம்.
  • வேலையில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும்.
  • பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்


மகரம்:

  • குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
  • பொன், பொருள் சேரும்.
  • கொடுக்கல் வாங்கலில் தாமதங்கள் நீங்கும்.
  • எதிர்பாராத புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • கலைத்துறையில் உள்ள திறமைகள் வெளிப்படும்.
  • உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் சீராகும்.
  • தொழில் மேன்மை அடையும்.
  • சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்


கும்பம்:

  • சமூக நிகழ்வுகளில் பங்கு கொள்வீர்கள்.
  • அரசு தொடர்பான விஷயங்களில் புரிதல் உண்டாகும்.
  • எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுப்பீர்கள்.
  • சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் கடினமான வேலைகளை முடிப்பீர்கள்.
  • வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்ய நேரிடலாம்.
  • கவனம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: இளம் ரோஸ் நிறம்


மீனம்:

  • நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
  • உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.
  • உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
  • மனதில் தெளிவு பிறக்கும்.
  • சேமிப்பு பற்றிய நல்ல ஆலோசனை கிடைக்கும்.
  • புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும்.
  • இழந்த சில பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.
  • தேடல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

Tags:    

Similar News