Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ஜூலை 30, 2024 செவ்வாய்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-07-30 01:23 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆடி மாதம் - 14

30-07-2024 செவ்வாய்க்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆடி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - இரவு 07.30 pm வரை தசமி திதி பிறகு ஏகாதசி திதி

நக்ஷத்திரம் - பிற்பகல் 01.40 pm வரை கிருத்திகை பிறகு ரோகிணி

யோகம் - காலை 06.01 am வரை மரண யோகம் பிற்பகல் 01.40 pm வரை சித்த யோகம் பிறகு அமிர்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM -08.45 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM-11.45 AM, 07.30 PM-08.30 PM

ராகு காலம் - 03.00 PM- 04.30 PM

எமகண்டம் - 09.00 AM- 10.30 AM.

குளிகை - 12.00 PM - 01.30 PM.

சூரிய உதயம். - காலை 05.53 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.38 PM.

சந்திராஷ்டமம் - சித்திரை பிறகு சுவாதி

இன்றைய (30-07-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : நம்பிக்கை உண்டாகும்.

பரணி : மாற்றங்கள் ஏற்படும்.

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

ரோகிணி : வாக்குவாதங்கள் நீங்கும்.

மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சிறு தொழிலில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். உடன்பிறப்புகள் பற்றிய புரிதல் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.

திருவாதிரை : வாய்ப்புகள் அமையும்.

புனர்பூசம் : புரிதல் மேம்படும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

புனர்பூசம் : கலகலப்பான நாள்.

பூசம் : குழப்பம் விலகும்.

ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

உலக வாழ்க்கை பற்றிய புரிதலும், புதிய கண்ணோட்டமும் பிறக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : பயணங்கள் கைகூடும்.

பூரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

உத்திரம் : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த விரயம் ஏற்படும். தொழில் முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். தாமதம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.

சித்திரை : தடைகள் விலகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

குடும்பத்தில் சுப காரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில பொறுப்புகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : செலவுகள் உண்டாகும்.

சுவாதி : நெருக்கடிகள் ஏற்படும்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : நன்மை உண்டாகும்.

அனுஷம் : சாதகமான நாள்.

கேட்டை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.

பூராடம் : வரவுகள் கிடைக்கும்.

உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த இலக்குகள் பிறக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

திருவோணம் : புரிதல்கள் ஏற்படும்.

அவிட்டம் : சேமிப்புகள் மேம்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய வேலை தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சமூகப் பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.

சதயம் : தாமதங்கள் குறையும்.

பூரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூலை 30, 2024

கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.

ரேவதி : தீர்வுகள் கிடைக்கும்.

Tags:    

Similar News