Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
அனைத்து ராசியினருக்கான இன்றைய செப்டம்பர் 12, 2023 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்;
ஆவணி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 12.9.2023, சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 02.01வரை துவாதசி . பின்னர் திரியோதசி. இன்று முழுவதும் ஆயில்யம். பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
மேஷம்
பிள்ளைகளை படிப்புக்காக வெளிநாடு அனுப்ப திட்டமிடுவீர்கள். ரிப்பேராகஇருந்த வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களோடு இணக்கம் ஏற்படும். அடுத்தவரின் பிரச்சனைக்காக மனம் வருந்துவீர்கள். வாங்கிய கடனை அடைக்க கஷ்டப்பட்டு வேலை பார்ப்பீர்கள்.
ரிஷபம்
நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியும். வேலை இடத்தில் இருந்த பிரச்சனைகளை வெற்றிகரமாக சந்திப்பீர்கள் . உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
மிதுனம்
பொதுச் சேவைகள் மூலமாக புகழ் கிட்டும். பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொழில் தொடர்பான பயணங்களில் நல்ல லாபம் கிடைக்கும் வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும் வங்கி கடன்களை குறைப்பீர்கள்.
கடகம்
பணிபுரியும் இடத்தில கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருங்கள். வெளியூர் பயணங்களின் போது தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரம் குறித்து கவலைப்படாதீர்கள். கடுமையாக உழைத்து உற்பத்தியை பெருக்குவீர்கள். எதிர்காலம் கருதி பொறுமையுடன் இருக்கவும்.
சிம்மம்
அந்தஸ்தை உயர்த்தி காட்ட அதிகமாக செலவு செய்வீர்கள். மன வருத்தம் காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரலாம். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்ட வேண்டாம். வீட்டை புதுப்பிப்பதற்கான ஆயத்த வேலைகளில் இறங்குவீர்கள்.
கன்னி
எதிர்பாராத வகையில் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். பணவரவை அதிகரிக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். அரசு வேலையில் சிக்கலான பிரச்சனை தீரும். பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் ஏற்றமடைந்து இரு மடங்கு லாபத்தை காண்பீர்கள்.
துலாம்
பேச்சுத் திறமையால் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த நண்பர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். கையிருப்பை நிலத்தில் முதலீடு செய்யலாம். வியாபாரத்தில் இருந்த வில்லங்கங்கள் தீரும்,
விருச்சிகம்
வேலையிடத்தில் சக ஊழியர்களால் சங்கடத்தை சந்திக்கலாம். மனைவியால் பேச்சால் மனக்காயப்படுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்க தாமதமாகலாம். எதிர்பார்த்த பணம் வராததால் வியாபாரத்தை விரிவுபடுத்த முடியாமல் தடுமாற்றம் ஏற்படும்
தனுசு
நல்லதை செய்தாலும் திருப்திப்படுத்த இயலாமல் சங்கடப்படுவீர்கள். கையில் வைத்திருக்கும் பணத்தை கவனமாகக் கையாளவும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கவனமாக இருக்கவும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதீர்கள். இன்று சந்திராஷ்டம நாள் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.
மகரம்
சிறிய வேலை என்றாலும் பெரிய அக்கறையோடு செய்வீர்கள். பெற்றோர்களின் பாராட்டு கிடைக்கும், . வியாபாரம் வெற்றிகரமாக நடைபெறும். வியாபாரிகள் அதிக பலன்களை அடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள்.
கும்பம்
ஆடம்பரங்களில் மனம் நாட்டம் கொள்வீர்கள். தேவையில்லாத பழக்கங்களில் ஈடுபடாதீர்கள்.உங்களால் செய்ய முடியாது என நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசுவீர்கள். தொழிலில் மேன்மை கிட்டும். எதிரிகளை பொறாமைப்படுவார்கள் வெளியூர்ப் பயணங்கள் ஆதாயம் தரும்
மீனம்
மனம் புண்பட பேசுபவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். தேவையற்ற செலவு ஏற்படலாம். பொறுமையைக் கடைபிடியுங்கள். உங்கள் முன்னேற்றத்தை கெடுக்க, கூட இருப்பவர்கள் குழி பறிக்கிறார்கள். கவனமாக நடத்து கொள்ளுங்கள்