Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய செப்டம்பர் 11, 2023 திங்கட்கிழமை ராசி பலன்கள்;

Update: 2023-09-11 01:31 GMT

ஆவணி மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை 11.9.2023, சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.12 வரை ஏகாதசி . பின்னர் துவாதசி. இன்று இரவு 10.56 வரை பூசம். பிறகு ஆயில்யம். மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்

நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர வாய்ப்பு கிட்டும். கூட்டுத் தொழிலில் அதிக ஆதாயம் உண்டு. விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கவும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுங்கள். வெளியூர் பயணங்களால் தொழிலுக்கு தேவையான நன்மை கிடைக்கும்.. பணப்பற்றாக்குறை நீங்கும் .

ரிஷபம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்களை பெற்று தொழிலை விரிவுபடுத்தலாம். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். . உடல் ஆரோக்கியம் மேம்படும்

மிதுனம் 

அனைத்து குடும்பத் தேவையையும் பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் சிக்கலான விஷயங்களைக் கடக்க முடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து தேவையற்ற நிதி நெருக்கடியைதவிர்ப்பீர்கள். ரத்த அழுத்தத்தை குறைக்க இயற்கை உணவுகளை உட்கொள்ளவும். நெருக்கடியிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

கடகம்

தொழிலில் அதிகமான முதலீடு செய்ய வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். போட்டிகளைச் சமாளிக்க சிரமப்படுவீர்கள். வெளியூர்களில் இருந்து வரவேண்டிய செய்திகள் தாமதமாக கிடைக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் உங்கள் கருத்துக்களைத் திணிக்காதீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் பயணத்தின் போது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு அவசியம். வேலையிடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டும்

கன்னி

தொழிலில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள் தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிட்டும். சிறு தொழில் செய்பவர்கள் நல்ல ஆதாயம் அடைவீர்கள். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தியை பெறுவீர்கள் . வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள்.

துலாம்

கால நேரம் பார்க்காமல் வேலை செய்து கடனை அடைப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். வேலை இடங்களில் இருந்த பிரச்சனை நீங்கும். போட்டி பந்தயங்களில் நல்ல லாபம் பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

விருச்சிகம்

தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலையை போக்குவீர்கள். வேலை இடங்களில் சுமூகமான நிலையை உருவாகும். வெளியூர்ப் பயணங்கள் நல்ல பலன் தரும். செல்வீர்கள் . உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.

தனுசு

கடுமையாக வேலை செய்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. தேவையற்ற காரியங்களில் தலையிட்டால் அவமானங்களை சந்திக்க நேரிடும். வேலைகள் தாமதமாகி மன அழுத்தம் அடைவீர்கள். கணக்கு வழக்குகளை கவனமாக கையாளுங்கள்.. இன்று சந்திராஷ்டம நாள் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

மகரம்

உற்சாகமான பேச்சால் உறவுகளைப் பலப்படுத்துவீர்கள். வீட்டில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வேலை இடங்களில் இருந்த பிரச்சனை நீங்கும். அரசுப் பணியாளர்கள் அதிக நன்மை அடைவீர்கள்..

கும்பம்

தடைகளைத் தகர்த்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். எதிரிகள் உங்களை வீழ்த்தப் நினைத்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சொந்த பந்தங்களில் இருந்து வந்த சின்னச் சின்ன சிக்கல்கள் தீரும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை .

மீனம்

குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் தீரும். மனைவி குழந்தைகளால் மனநிம்மதி குலையும். நண்பர்கள் உதவியால் தொழிலை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிக நன்மை உண்டு. கடனை அடைக்கப் போராடுவீர்கள்.

Tags:    

Similar News