Horoscope Today: 12 ராசியினருக்கான இன்றைய ராசி பலன்கள்
தினசரி ராசிபலன் புதன்கிழமை ஆகஸ்ட் 30 2023க்கான அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்;
சந்திரன் இன்று கும்பத்தில் உள்ள சதயம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று கடக ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
மேஷம்
சந்திரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு இன்று நல்ல லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பான நாளாக அமையும். இன்றைய நாளில் புதிய வியாபாரம், தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்குச் சாதகமான நாளக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
நாள் முழுவதும் மனதிற்கு சந்தோஷமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிறிய பிரச்சினைகள் தீரும். பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் வந்து சேரும். தன லாபம் உண்டாகும். வந்த கடன் பிரச்னைகள் தீரும். செல்வ, செழிப்பான நாளாக இருக்கும்.
மிதுனம்
இன்று உயர்வைத் தரக்கூடிய நாளாக இருக்கும். மருத்துவ செலவுகள் குறையலாம். நீண்ட நாட்களாக இருக்கும் தூக்கமின்மை பிரச்னை, குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், தீர்ந்து மனதிற்கு நிம்மதி கிடைப்பதற்கான நாளாக அமையும்
கடகம்
சந்திரன் 8ல் அஷ்டம ஸ்தானத்தில் இருக்கக்கூடிய சந்திராஷ்டம தினமாக இருப்பதால் இன்று எடுக்கக்கூடிய எந்த ஒரு முயற்சியிலும் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே சில மனக்கசப்புகள் வரக்கூடும். பொறுமையும், நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
நாள் முழுவதும் மன சஞ்சலம் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். சந்திரன் 7ல், ராசியில் சூரியன் இருப்பதால் உங்களுக்கு மனகுறை ஏற்படலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
கன்னி
பல நாட்களுக்கு பின் சந்திக்கும் நண்பர்கள் மூலம் பண உதவிகள் கிடைக்கலாம். எல்லா வேலைகளையும் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்த தடைகள் கடின உழைப்பால் நீங்கும். பெற்றோரின் மகிழ்ச்சியையும் ஒத்துழைப்பையும் காண்பீர்கள்.
துலாம்
ராசியில் கேது, 5ல் சந்திரன் இருப்பதால் தன லாபங்கள் ஏற்படும். தங்கம், வெள்ளி வாங்குவதற்கு பெண்களுக்கு உகந்த நாள். உடன் பிறப்புகள் மூலம் சந்தோஷம் ஏற்படும். உங்களின் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். செல்வம் பெருகும், நிதி நிலை பலப்படும்.
விருச்சிகம்
உங்களின் மனக்குறைகள், குழப்பங்கள் தீரும். மனதில் பய உணர்வு நீங்கி தைரியம் ஏற்படும். குழந்தைகளால் ஏற்படும் பிரசனைகள் தீரும். இன்று எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.வீடு மற்றும் வியாபாரத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
தனுசு
எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி ஏற்படக்கூடிய நாள். நீண்ட தூர பயணங்கள் சிலருக்கு ஏற்படும். மனதில் இருக்கும் குறைகள் தீருவதற்கு ஏற்ற நாள். சகோதர, சகோதரிகளால் லாபம் ஏற்படும். புகழ் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இன்று பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
பணி சார்ந்த குழப்பங்கள் தீரும். வழக்கு, விசாரணையில் இருக்கும் சிக்கல்கள், குழப்பங்கள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள், மன பாரம் தீரக்கூடிய சூழல் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல தூக்கம் கிடைக்கும். மனம், உடல் கஷ்டங்கள் தீர்ந்து மனதிற்கு இதமான நாளாக அமையும்.
கும்பம்
நாள் முழுவதும் அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கும். நண்பர்களுக்காக அலைய வேண்டிய சூழல் ஏற்படலாம். இருசக்கர வாகனம் வாங்குதல், மாற்றுவது தொடர்பான விஷயங்களிலும், வீடு மாற்றம் செய்வதற்கு ஏற்றதான நாளாகவும் அமையும். இன்று எந்த ஒரு முடிவையும் விவேகத்துடனும் எடுக்க மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மீனம்
கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கஷ்டம் தீரும். சொத்து தகராறு தொடர்பாக , நீண்ட நாட்களாக இருந்த எந்த ஒரு பிரச்னையும் தீரும். சமூகத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பொது ஆதரவும் அதிகரிக்கும். இன்று சில புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.