Horoscope Today 12 ராசிகளுக்கான ஆகஸ்ட் 12, இன்றைய ராசி பலன்
ஆகஸ்ட் 12, 2023 சனிக்கிழமை அனைத்து ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள்;
ஆடி மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை 12.8.2023,சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.38 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று காலை 09.40 மணி வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம்
வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. பெற்றோர் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.
ரிஷபம்
எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வேலைப்பளு அதிகமாக இருக்கும். வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
மிதுனம்
காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம்.
கடகம்
எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.
சிம்மம்
அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.
கன்னி
குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்..
துலாம்
கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.
விருச்சிகம்
எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். பிரச்சனையை கண்டு பயப்படாமல் கையாள்வீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னை தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை ஏற்படலாம் .
தனுசு
காரிய தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நன்மை கிடைக்கப்பெறுவார்கள். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். வேலை மாற்றம் உண்டாகும்.
மகரம்
நீண்ட நாள் இழுபறியாக இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும்.
கும்பம்
தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
மீனம்
வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.