Horoscope Today 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்

ஆகஸ்ட் 5, 2023 சனிக்கிழமை அனைத்து ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள்;

Update: 2023-08-05 01:05 GMT

பைல் படம்.

அனைத்து ராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் இன்றைய நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

20ம் தேதி சனிக்கிழமை 05.8.2023,சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.37 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று காலை 10.44 மணி வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

மேஷம்

வீண்வம்புக்குச் செல்லாதிருப்பது நல்லது. பெண்கள் மூலம் விரயச் செலவுகள் ஏற்படும். செலவுகளைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கவும். வியாபாரத்தில் எதிரான நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் ஓரளவு பணம் பார்ப்பீர்கள்.

ரிஷபம்

தனவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைத்து நிதி நிலைமையை சீர்படுத்துவீர்கள். பெண்கள் மூலம் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாள். திய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

மிதுனம்

வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் மற்றும் இனிய திருப்பங்கள் ஏற்படும். அரசு உதவிகள், புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். ஷேர் மார்க்கெட்டில் அதிக பலனடைவீர்கள். அலைச்சல் அதிகமானாலும் அதற்கேற்ற வருமானம் அடைவீர்கள்.

கடகம்

தீவிர தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பேச்சுவார்த்தையில் நிதானம் தவறாதீர்கள்.

சிம்மம்

எவரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாகும்

கன்னி

எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். காலத்திற்கு ஏற்ற மாதிரி வியாபாரத்தை மாற்றுவீர்கள்.

துலாம்

வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். தனக்கெனத் தனி வீடு வாங்கும் எண்ணம் எழும். குடும்பத்தில் சுபகாரியம் கொண்டாட்டங்கள் நிறைவேறும். வியாபார உத்திகளால் லாபத்தைக் காண்பீர்கள்.

விருச்சிகம்

தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டிய நாள். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. அவசியமில்லாத செலவுகளால் அல்லல் படுவீர்கள்.வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிட்டாது. ஏதாவது பிரச்சனை தோன்றி தொழிலில் இடையூறுகளை சந்திப்பீர்கள்.

தனுசு

அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேற முயலுங்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை நடத்துவீர்கள். நீர் நிலைகளில் கவனமுடன் இருங்கள்.

மகரம்

தேவையான வருமானத்தை தடையின்றி பெறுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும். பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவீர்கள். தொழிலில் தடை ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கும்பம்

கவனமாகப் படித்து கல்வியில் தேர்ச்சி பெறலாம். புகழையும் செல்வாக்கையும் அதிகரிப்பீர்கள். பணம் தாராளமாகப் புழங்குவதால் சேமிப்பை உயர்த்துவீர்கள். வாக்குவாதங்களை தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவை.

மீனம்

தனவரவு ஏற்பட்டு மகிழும் நாள். புதிய பதவிகள், வாகனம், வசதி வாய்ப்புகள் என எல்லா விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

Tags:    

Similar News