அனைத்து ராசிகளுக்கான 13 மே, 2023 இன்றைய ராசிபலன்

மே 13, 2023 அனைத்து ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் கணிப்புகள் உங்களுக்காக;

Update: 2023-05-13 01:04 GMT

காட்சி படம் 

மேஷம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

உங்களின் ஜாலியான இயல்பு மற்றவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம்.

ரிஷபம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

மிதுனம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நேரத்தை நன்கு பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

கடகம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

இன்று புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும்.உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும்.

சிம்மம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

வணிகத்தில் அல்லது வேலையில் நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில்வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

கன்னி ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள்.

துலாம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

இன்று முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும்.இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

உடல் வலி தொடர்பான பிரச்சினைகளும் வரக் கூடும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும்.

தனுசு ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சனை தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது.

மகரம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

கடன் வழங்குவதற்கு முன் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். இன்று உங்கள் ஆளுமையை மேம்படும்

கும்பம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

பண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் தீரும். முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும்.

மீனம் ராசிபலன் (சனிக்கிழமை, மே13, 2023)

முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. யாரையும் புண்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யவும்

Tags:    

Similar News