12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்

உங்கள் ராசிக்கு, இன்று எப்படி இருக்கும் என்று பார்ப்போமா? 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்காக;

Update: 2023-05-02 01:03 GMT

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். புதிய திட்டம் மற்றும் செலவுகளை ஒத்திவைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

ரிஷபம்

பண நிலைமையை சரிபார்த்து உங்கள் செலவுகளை குறைக்கவும். இன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். மனதளவில் ஆரோக்கியமாக இருப்பீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும்.

மிதுனம்

இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து உங்களின் பல நிதி பிரச்சனைகளை தீர்க்கும். வியாபாரிகளுக்கு நல்ல நாள், திடீர் எதிர்பாராத லாபம் அல்லது திடீர் லாபம் கிடைக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

கடகம்

இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.

சிம்மம்

இன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சற்று சோர்வாக இருக்கலாம். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும் ஒரு நன்மையான நாள்

கன்னி

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். பணம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். தெய்வீக இன்பத்தைத் தேடி ஆன்மீக ஆசிரியரைச் சந்திக்கச் செல்லலாம்

துலாம்

பண ஆதாயங்கள் இருக்கும். இன்று நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்ய போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் என்ற மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். பணப் பரிவர்த்தனைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். உங்களின் வேலைத்திறனை அதிகரிக்க புதிய உத்திகளுக்குத் தகவமைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம்.

தனுசு

இன்று குடும்ப பிரச்சனை தீரும். முதலீடு செய்வதற்கு முன் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. ஆக்கப்பூர்வமான வேலை உங்களை நிம்மதியாக வைத்திருக்கும். பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.

மகரம்

எதிர்கால தேவைக்கு பணத்தைச் சேமிக்கத் தொடங்குங்கள். உங்கள் யோசனைகள் தோல்வியடையாது என்பதில் உறுதியாக இருக்கும் வரை அதை தொடங்காதீர்கள். இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்கள் அதிர்ஷ்டமான நாள்,. இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். இன்று உங்கள் மனதிற்கு பிடித்த ஒருவரை சந்திப்பீர்கள்

மீனம்

இன்று உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். முக்கியமான மாற்றங்களைச் செய்தால் வெற்றி நிச்சயம் உங்களுடையது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.

Tags:    

Similar News