Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 31, 2023 ஞாயிற்றுகிழமை ராசி பலன்கள்

Update: 2023-12-31 01:57 GMT

மேஷம்

உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

ரிஷபம்

புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் அமையும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

மிதுனம்

குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும்.

கடகம்

பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடந்தகால கடன்கள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரும் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய நேரம். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

கன்னி

முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்

துலாம்

சில புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் பணியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்

தொழிலில் இருந்துவந்த மந்தநிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியும் தக்கசமயத்தில் அமையும். அரசுவழியில் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

மனைவி, பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடுகட்டி குடிபுகும் யோகமும் வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும்.

மகரம்

தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடபுடலாக நடைபெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழிலிலும் நல்ல லாபம் அமையும்.

கும்பம்

கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்களின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும்.

மீனம்

உங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். பூர்வீக சொத்துகளாலும் சாதகமான பலனைப் பெறமுடியும்.

Tags:    

Similar News