Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 30, 2023 சனிக்கிழமை ராசி பலன்கள்
மேஷம்
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். திறமைக்கேற்ற பாராட்டுதல்களால் மனநிம்மதி உண்டாகும்.
ரிஷபம்
புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கங்கள் யாவும் நிறைவேறும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவுகள் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
மிதுனம்
உங்கள் திறமைக்கு தீனிபோட்டதுபோல் வாய்ப்புகள் அமையும். கடன்கள் அனைத்தும் பைசலாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.
கடகம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும் கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களும் நலத்துடன் இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும்.
சிம்மம்
தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் சாதகமான பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். உணவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
கன்னி
குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யமான உறவு இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.
துலாம்
திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் தக்கசமயத்தில் உதவுவார்கள். வீடு, மனை, வாகன யோகங்கள் அமையும். உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்.
விருச்சிகம்
கொடுக்கல்-வாங்கல் திருப்தி கரமாக அமையும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல லாபம் அமைந்து பொருளாதாரநிலை உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும்.
தனுசு
பெரிய தொகைகளைக்கூட எளிதாக ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறமுடியும். நீண்ட நாட்களாக இழுபறி நிலையிலிருந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். மொத்தத்தில் சந்தோஷமான நாள்.
மகரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை மேன்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள்.
கும்பம்
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பும் நல்ல மேன்மையை ஏற்படுத்தும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தரும். தொழிலாளர்கள் அனுகூலமாக செயல்படுவதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
மீனம்
தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனுகூலமானபலனை அடைவார்கள். தடைப்பட்ட பதவிகளும் கிடைக்கப்பெற்று கௌரவமானநிலைகள் ஏற்படும்.