Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
அனைத்து ராசியினருக்கான இன்றைய தினம் டிசம்பர் 12, 2023 செவ்வாய்கிழமை ராசி பலன்கள்
மேஷம்
சிலருக்கு விரும்பியவரை கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்-வாங்கல் நல்லமுறையில் நடைபெறும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும்.
ரிஷபம்
கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்
பொருளாதார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத திடீர் தனசேர்க்கைகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்கள் தேடி வருவர்.
கடகம்
நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். பூர்வீக சொத்துகளால் கூடுதல் லாபம் உண்டாகும். வீடு, மனை, பூமி வாங்கும் யோகம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்
வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நன்மை தரும்.. எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக இருந்து வந்த கடந்த கால பிரச்சினைகள் விலகி நல்ல லாபத்தையும் ஏற்றத்தையும் பெறுவீர்கள்.
கன்னி
அலைச்சல் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கடன்கள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். சில நேரத்தில் தேவையற்ற சோதனைகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வரலாம்.
துலாம்
தொழில் வியாபாரம் தொடர்பான கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எந்தவொரு காரியத்தையும் முழுமையாகச் செய்துமுடிக்க முடியாமல் தாமதம் ஏற்படும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். குடும்பத்திலும் வீணான சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
விருச்சிகம்
எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாத நிலை உண்டாகும். உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். கடன் தொல்லை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து உடல்நிலை சோர்வடையும்.
தனுசு
பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும். வீணான பழிச்சொல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கைநழுவி பொருளாதாரத் தடைகள் உண்டாகும். எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது.
மகரம்
வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். நன்மை, தீமை கலந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்திலிருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்வதால் கடன்களைத் தவிர்க்கலாம்.
கும்பம்
சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்து சிந்தித்துச் செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வருவதால் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்
கௌரவமான பதவி உயர்வுகள் கிடைத்தாலும் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள இயலாது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் சுமாராகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். சகோதரர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.