Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ஆகஸ்ட் 18, 2024 ஞாயிற்றுக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-08-18 01:12 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆவணி மாதம் - 02

18-08-2024 ஞாயிற்றுக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

3.ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆவணி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

6 . திதி - அதிகாலை 04.46 am வரை திரயோதசி திதி பிறகு சதுர்த்தசி திதி

நக்ஷத்திரம் - காலை 10.06 am வரை உத்திராடம் பிறகு திருவோணம்

யோகம்- அதிகாலை 06.03 am வரை சித்த யோகம் பிறகு நாள் முழுவதும் அமிர்த யோகம்

நல்ல நேரம் - 07.45 AM - 08.45 AM, 01.30 PM - 02.00 PM

கௌரி நல்ல நேரம் 10.45 AM-11.45 AM, 01.30 PM-02.30 PM

ராகு காலம் - 04.30 PM- 06.00 PM .

எமகண்டம் - 12.30 PM- 01.30 PM.

குளிகை - 03.00 PM - 04.30 PM.

சூரிய உதயம். - காலை 05.57 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.28 PM.

சந்திராஷ்டமம் - காலை 10.06 am வரை மிருகசீரிஷம் பிறகு திருவாதிரை

இன்றைய (18-08-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பயணம் சார்ந்த செயல்களில் அனுபவம் கிடைக்கும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். துணிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள் நிறம்

அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.

பரணி : அனுபவம் ஏற்படும்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

திட்டமிட்ட காரியங்களில் சிறு அலைச்சலுக்கு பிறகு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காதணி ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும். சகோதரர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சிந்தனைப் போக்கில் புதுமைகள் ஏற்படும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரோகிணி : மேன்மை உண்டாகும்.

மிருகசீரிஷம் : புதுமைகள் ஏற்படும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

குடும்பத்தில் இருந்துவந்த சூழ்நிலை அறிந்து செயல்படவும். அமைதியான செயல்கள் உங்கள் மதிப்பை மேம்படுத்தும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த செயல்களில் அலைச்சல் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்க்கவும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

மிருகசீரிஷம் : மதிப்புகள் மேம்படும்.

திருவாதிரை : கவனம் வேண்டும்.

புனர்பூசம் : அலைச்சல் உண்டாகும்.

கடக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தன வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : வரவுகள் கிடைக்கும்.

பூசம் : ஆதரவான நாள்.

ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடம் மாற்றம் சாதகமாக அமையும். மகிழ்ச்சியை தரும் இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பூரம் : இடமாற்றம் சாதகமாகும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், ஒற்றுமையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பொழுதுபோக்கு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தன வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

உத்திரம் : ஈடுபாடு உண்டாகும்.

அஸ்தம் : இன்னல்கள் குறையும்.

சித்திரை : ஒத்துழைப்பான நாள்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வித்தைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும். சொந்த ஊர் பயண சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

சுவாதி : இழுபறிகள் மறையும்.

விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஏற்றமான சூழ்நிலை ஏற்படும். வியாபார பணிகளில் அனுகூலமும், செல்வாக்கும் அதிகரிக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

விசாகம் : தன்னம்பிக்கை மேம்படும்.

அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

கேட்டை : புரிதல் மேம்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : சிந்தித்துச் செயல்படவும்.

பூராடம் : லாபம் அதிகரிக்கும்.

உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.

மகர ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற சிந்தனைகள் மூலம் சோர்வு உண்டாகும். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறுதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

திருவோணம் : சோர்வான நாள்.

அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

பணிபுரியும் இடத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைப்பது நல்லது. கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகளிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். வங்கி பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். இழுபறியாக இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : ஏற்ற, இறக்கமான நாள்.

சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.

பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 18, 2024

வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பணி நிமித்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உறவினர்களோடு மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவான முடிவுகள் பிறக்கும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளையும் பெறுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரட்டாதி : அபிவிருத்தியான நாள்.

ரேவதி : சேமிப்புகள் மேம்படும். 

Tags:    

Similar News