Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ஆகஸ்ட் 1, 2024 வியாழக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-08-01 01:44 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம்- ஆடி மாதம் - 16

01-08-2024 வியாழக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - தக்ஷிணாயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆடி மாதம்

பக்ஷம்- கிருஷ்ண பக்ஷம்

திதி - மாலை 05.17 pm வரை துவாததசி திதி பிறகு திரயோதசி திதி

நக்ஷத்திரம் - பிற்பகல் 12.47 pm வரை மிருகசீரிஷம் பிறகு திருவாதிரை

யோகம் -காலை 06.02 am வரை சித்த யோகம் பிறகு நாள் முழுவதும் மரண யோகம்

நல்ல நேரம் - 10.45 AM -11.45 AM

கௌரி நல்ல நேரம் 12.15 AM-01.15 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 01.30 PM- 03.00 PM .

எமகண்டம் - 06.00 AM- 07.30 AM.

குளிகை - 09.00 AM - 10.30 AM.

சூரிய உதயம். -காலை 05.53 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.38 PM.

சந்திராஷ்டமம் - விசாகம் பிறகு அனுஷம்

இன்றைய (01-08-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

பிற மொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அஸ்வினி : ஆதரவான நாள்.

பரணி : ஆர்வம் ஏற்படும்.

கிருத்திகை : அமைதியின்மை உண்டாகும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சொத்துக்கள் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல் அதிகரிக்கும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

கிருத்திகை : புரிதல் ஏற்படும்.

ரோகிணி : மதிப்பு மேம்படும்.

மிருகசீரிஷம் : அலைச்சல் அதிகரிக்கும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : குழப்பங்கள் குறையும்.

திருவாதிரை : தடைகள் மறையும்.

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

கடக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

உறவினர்களின் உண்மை நிலைகளை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திர போக்கு மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கவலை குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

ஆயில்யம் : நெருக்கடிகள் நீங்கும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். இணைய துறைகளில் மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். மறுமணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : புத்துணர்ச்சியான நாள்.

பூரம் : மாற்றம் ஏற்படும்.

உத்திரம் : வரவுகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிற மொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : லாபம் உண்டாகும்.

அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும்.

சித்திரை : சாதகமான நாள்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். அனைவரிடத்திலும் அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி ஏற்படும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். விவசாயப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். கடன் உதவிகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஒத்துழைப்பான நாள்.

சுவாதி : அனுபவம் ஏற்படும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

உடனிருப்பவர்கள் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எளிமையான பணிகளில் தாமதம் ஏற்படும். கலை பொருட்களில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். குழந்தைகளிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : அனுபவங்கள் கிடைக்கும்.

அனுஷம் : அலைச்சல் ஏற்படும்.

கேட்டை : கவனம் வேண்டும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மூலம் : மாற்றம் பிறக்கும்.

பூராடம் : புரிதல் உண்டாகும்.

உத்திராடம் : சாதகமான நாள்

மகர ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். இடம்பெயர்வது சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். குறுகிய பயணத்தால் புதிய வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வாரிசுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.

திருவோணம் : அனுபவம் கிடைக்கும்.

அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

கலகலப்பான பேச்சுக்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்துவீர்கள். வரவுகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். இலக்கியப் பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.

பூரட்டாதி : கற்பனை மேம்படும்.

மீன ராசிக்கான பலன்கள் ஆகஸ்ட் 1, 2024

மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் மறையும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி : குழப்பம் மறையும்.

ரேவதி : ஆர்வம் ஏற்படும்.

Tags:    

Similar News