ஜாதகம் என்றால் என்ன? அதை எப்படி கணிக்கிறார்கள்?
Horoscope in Tamil Meaning-ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நாளன்று, பிறந்த நேரத்தில் வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகங்களின் இருப்பு நிலையைக் காட்டும் ஒரு பதிவு.;
Horoscope in Tamil Meaning
Horoscope in Tamil Meaning
ஜாதகம் என்பது அவரவர் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளின் தன்மைகளை கூறுவது. தீவினை செய்தோர் தீமையையும், நல்வினை செய்தோர் நன்மையும் அடைதல் என்பது பிரம்ம தேவர் விதித்த விதி என்று கூறப்படுகிறது. அதனடிப்படையில் கோள்களின் நிலை உணர்ந்து ஜோதிட சாஸ்திரங்களை நம் முன்னோர்கள் கணிதத்தில் அறிந்து நல்ல காலம் வரும்போது மகிழ்ச்சி அடையலாம், அதேசமயம் தீயகாலத்தின்போது வருந்தாமல் அதனை தெய்வத்தின் திருவருளால் கடந்து செல்லலாம் என்று அருளிச் செய்தனர்.
ஜாதகம் என்றால் என்ன?
ஜாதகம் என்பது ஜாதகர் பிறந்த நேரத்திற்கு ஏற்ற கோள்நிலைகளால் உண்டாகும் பலன்களை கண்டறிந்து கூற உதவுகிறது.
- திதி
- வாரம்
- நட்சத்திரம்
- யோகம்
- கரணம்
இந்த பஞ்ச அங்கங்களின் அடிப்படையில், இலக்கினம், ஒன்பது கோள்கள், போன்றவற்றால் பிணைக்கப்பட்டது
ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நாளன்று, பிறந்த நேரத்தில் வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகங்களின் இருப்பு நிலையைக் காட்டும் ஒரு பதிவு. இதனை எளிதில் விளங்கும்படி கட்டங்களில், விவரங்களை எழுதி வைப்பார்கள். நமது பூமியை ஆதாரமாக வைத்து, பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளியை 12 பாகங்களாகப் பிரித்து (12 ராசிகள்), எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்துகிறது. ராசி என்பது 12 பாகத்தில் ஒரு பகுதி, இப்போதைக்கு ராசி என்றால் என்ன என்பதை இந்த அளவிற்கு புரிந்து கொண்டால் போதுமானது.
ஒருவர் தனது குடும்பத்தில் சுப காரியங்கள் செய்ய முடிவெடுக்கிறார், அதனை எப்போது செய்வது என்ற நிலையில் உடனே அவர் சென்று பார்ப்பது ஜோதிடரைத்தான். நல்ல காரியங்கள் செய்யவேண்டிய காலம் மற்றும் தவிர்க்க வேண்டிய காலம் என்று இரண்டு வகைகள் உள்ளது.
ஒவ்வொரு காரியங்களும் மாதங்கள், கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நட்சத்திர தியாஜ்யம், அமிர்தாதி யோகம், கரிநாள், நேத்திர ஜீவன் என்ற அடிப்படையிலும் பார்க்கலாம்.
மேலும் அடுத்ததாக லக்கினம், கிரக நிலைகள், பஞ்சக சுத்தி, தாராபலன், தின கால ஓரை, முக்குணவேளை, கெளரி பஞ்சாங்கம், இராகு மற்றும் குளிகாதி நால்வர் காலம், பஞ்ச பட்சி சாஸ்திரம், சகுனம், நிமித்தம், ஆரூடம், ஆகிய அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது.
ஒரு நாளின் இரவு 12:00 மணியை 0:00 மணி என்று தொடங்கி மறுதினம் இரவு 12:00 மணி வரை 24:00 மணி என்ற கணக்கில் இரயில்வே மணி செயல்படுத்தப்படுகிறது. இதில்முக்கியமாக நம் ஜோதிட கணக்கீடுகள் தமிழ் முறைப்படி காலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை, 60 நாழிகை என்ற அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது.
ஒரு நாள் சூரிய உதய நேரத்தில் எந்த ஹோரை தொடங்குகிறோம், அந்த கிரகத்தின் பெயரை அந்த நாளுக்கு வாரப்பெயர்களாக வைத்தார்கள்.
ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தில் பூமியின் மீது குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கம் அல்லது தாக்கம் ஏற்படுகிறது.
அந்த தாக்கம் 2 1/2 நாழிகை அதாவது 1 மணி நேரம் ஏற்படுகிறது. பிறகு அடுத்து 2 1/2 நாழிகை வேறு கிரகத்தின் தாக்கம் ஏற்படுகிறது.
அதைத்தான் அக்கிரகத்தின் ஹோரைகள் என்று கூறுகிறோம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயம் முதல்2 1/2 நாழிகை சூரியனின் தாக்கமும், திங்கட்கிழமை சூரிய உதயம் முதல் 2 1/2 நாழிகை சந்திரனின் தாக்கமுமாக முறையே தொடர்ந்து செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்றவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகங்களின் தாக்கமுமாக ஏற்படுகிறது. இதன் அடிப்படையில் தான் வாரத்தின் பெயர்களாக வைத்தார்கள்.
கிழமைகளில் பிறந்தவர் குணநலன்கள் :
ஞாயிறு பிறந்தவர்: அதிக பேச்சு.தைரியம், பயணங்களில் ஆர்வம் உள்ளவர்.
திங்கள் பிறந்தவர்: மென்மையானவர், அமைதியானவர், உண்மையை விரும்புவர், நல்ல தோற்றமுள்ளவர்.
செவ்வாய் பிறந்தவர்: கோபம், தைரியம், காரிய ஆற்றல், பெண்களிடம் ஆதரவு தேடுபவர்.
புதன் பிறந்தவர்: நல்ல இனிமையான தோற்றம், உயர்ந்த மதிநுட்பம் உள்ளவர்.
வியாழன் பிறந்தவர்: இரக்க குணம், நடைமுறைவாதி, நேரத்தை முறையாக பயன்படுத்துபவர்.
வெள்ளி பிறந்தவர்: நடைமுறைவாதி, வெள்ளை நிற உடைகளை விரும்புவர்.
சனியில் பிறந்தவர்: பொதுவாகவே ஏழ்மையானவர்கள், மெலிந்த உடல், மற்றவர்களிடம் புகழத் தெரியாத குணம், உணர்ச்சிவசப்படுபவர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2