சகஸ்ரலிங்கம்..1008 சிவலிங்கம்..கல்யாண சுப்பிரமணியர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமையனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு செம்பகாளியம்மன் திருக்கோயில் வரலாறு;

Update: 2022-04-08 02:02 GMT

சொக்க செம்பீஸ்வரர் சகஸ்ரலிங்கம் வடிவில் 1008 லிங்கங்களாக இருக்கும் அருள்மிகு செம்பகாளியம்மன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமையனூர் என்னும் ஊரில் அருள்மிகு செம்பகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் சோமையனூர் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.


இத்திருக்கோயில் மாங்கரையில் இருந்து உற்பத்தி ஆகும் செம்பா நதிக் கரையில் அமைந்துள்ளது. சொக்க செம்பீஸ்வரர் சகஸ்ரலிங்கம் வடிவில் 1008 லிங்கங்களாக இருப்பது கோவை மாநகரில் எங்கும் இல்லதா சிறப்பு. இது ஆயிரத்து எட்டு சிவ லிங்கங்களை வழிபடுவதற்கு நிகரானது. கல்யாண சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் அருள்பாளிக்கிறார். திருமணத்தடை உள்ளவர்கள் மனதார இவரை பிரார்த்தனை செய்தால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும்.

மீனாட்சி உடனமர் சொக்க செம்பீஸ்வரருக்கு சகஸ்ரலிங்கம், ஸ்ரீ வள்ளி தெய்வானை கல்யாண சுப்ரமணியருக்கு இரண்டு நிலை கோபுரம் மற்றும் முகப்பு மண்டபமும் அமைந்துள்ளது. ஸ்ரீ கணபதிக்கு தனி ஆலயமும், நவகிரகங்களுக்கு தனி ஆலயமும், பரிவார தெய்வங்களாக ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீசப்த கன்னிமார்கள் பலிபீடத்துடன் குறிஞ்சி மண்டபமும், கொடிமரமும் அமைந்துள்ளது.

இந்திரன் முதலாகிய எண்திசை காவலர்களுக்கும் ஆகம விதிப்படியும், ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்ற சிற்ப சாஸ்திர முறைப்படியும், மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஸ்தல விருச்சமாக செண்பக மரமும் வியக்கும் வண்ணம் உள்ளது.

அருள்மிகு செம்பகாளியம்மன் திருக்கோயிலலில் நவராத்திரி இக்கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.


திருமணத்தடை உள்ளவர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Tags:    

Similar News