அரச மரத்தை சுத்துங்க... வாழ்க்கையில் சந்தோஷமா இருங்க...!
Arasamaram in Tamil-சிவன், விஷ்ணு, பிரம்மா என, மும்மூர்த்திகள் வாசம் செய்யும் ராஜ விருட்சம், அரச மரத்தை குறிப்பிட்ட தினங்களில் சுற்றிவந்தால், வாழ்க்கை வளமாக்கும் பயன்களை அடையலாம்.
Arasamaram in Tamil-பழங்காலத்தில் இருந்தே, நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு சிறப்பு அதிகம். அரசமரத்தை பிரதட்சணம் செய்தால் புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமண தடை, புத்திர தோஷம் நீங்கவும், கல்வி தடை, தீராத கடன் பிரச்னை உள்ளவர்களும் அரசமர பிரதட்சணம் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என, சாஸ்திரம் கூறுகிறது.
தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் மரங்களில், அரசமரம் முதன்மையானது. மரங்களின் அரசன் என்று போற்றப்படுகிறது. இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றனர் என, புராணங்கள் கூறுகின்றன. 'தேவலோகத்து மரம்' என்றும் அரச மரத்தை வர்ணிப்பர். பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால், அரசமர காற்றை நாம் சுவாசித்தால், ஆயுளும் வளரும். ஆரோக்கியம் சீராகும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
அரச மரத்தடியில் விநாயகப் பெருமானையும், நாகராஜனையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத்தடைகள் அகலும். கனிவான வாழ்க்கை அமையும். ராஜவிருட்சம் அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம், 'ராஜ விருட்சம்' என்று அழைக்கப்படுகிறது.
'மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்" என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன. அரசமரம் இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான்.
நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுபூர்வமானதும், மிக புத்திசாலியான மரமும் கூட. அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிக சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் . புத்தர் அந்த மரத்தின் கீழ் ஞானம் பெற்றது ஒரு தற்செயலான செயல் அல்ல என்பதையே இது உணர்த்துகிறது.
ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் அரசமரத்தை, சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
திங்கள்கிழமை: வீட்டில் மங்கல செயல்கள் தடையின்றி நடக்கும்.
செவ்வாய்கிழமை: செவ்வாய் தோஷம் நீங்கும்.
புதன்கிழமை: வியாபாரம் பன்மடங்கு பெருகும்.
வியாழக்கிழமை: கல்வியில் சிறந்து விளங்கலாம்.
வெள்ளிக்கிழமை: சகல சவுபாக்கியங்களும் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும்.
சனிக்கிழமை: எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகாலட்சுமி அருளை பெற்றுத்தரும்.
ஞாயிற்றுக்கிழமை: தீராமல் இருக்கும் எல்லா நோயையும் போகும்.
சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கள்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வலம் வருதல் நலம்.
மூலதோ பிரம்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம
இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். கூடவே உங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ, பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும். 108 முறை பிரகார வலம் முடிந்ததும், அந்த பொருட்களை தானம் அளிக்க வேண்டும். இந்த வழிபாடு 'அமாசோமவார விரதம்' என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் செய்யும் அன்னதானம், பலமடங்கு புண்ணியங்களை கொண்டு சேர்க்கும். துணிகளை தானமாக கொடுக்கலாம். அமாவாசையன்று, அரசமரத்தை வலம் வந்து எல்லா நன்மையையும் பெறலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2