குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
வீடு, வாகனம் சேரும், பழைய வழக்குகள் சுமுகமாகத் தீர்வாகும். தம்பதியரிடையே இருந்த விரிசல்கள் நீங்கும்.;
நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
கடகம் சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்பவர்கள். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது தைரிய ஸ்தானம் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - சப்தம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்துக்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே மூன்று, ஐந்து, ஏழாம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பினால் உங்கள் சகோதர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானங்கள் விசேஷ நன்மை பெறுகின்றன. இதனால், வீடு, வாகனம் சேரும், பழைய வழக்குகள் சுமுகமாகத் தீர்வாகும். தம்பதியரிடையே இருந்த விரிசல்கள் நீங்கும். என்றாலும் தேவையற்ற தர்க்கம் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.
தொழிலில் உங்கள் உழைப்பே லாபத்தை ஈட்டும். கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் வேண்டாம். பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம். அரசியலில் இருப்பவர்கள் அடக்கத்தால் அதீத நன்மை பெறலாம். பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். அரசாங்கத் துறையில் உள்ளோர் மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். புறம்பேசுவோரை புறக்கணியுங்கள். மாணவர்கள் மறதியை விரட்ட, தினம்தினம் படியுங்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். மாதாந்தர உபாதைகளில் அலட்சியம் வேண்டாம்.சினிமா, கலைத்துறையினர் முயற்சிகளால் முன்னேற்றம் காணலாம். சிற்றின்ப நாட்டம் தவிருங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். அஜீரணம், தூக்கமின்மை,அலர்ஜி, தலைவலி உபாதைகள் வரலாம். பஞ்சவடி அனுமன், ராகவேந்திர மகான் வழிபாடு, வாழ்வை வளமாக்கும்.உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.
நட்சத்திர பலன்கள்
புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த குரு பெயர்ச்சியால் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.
பூசம்:
இந்த குரு பெயர்ச்சியால் ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறுசிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மனதைரியத்தால் வெற்றி காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.
ஆயில்யம்:
இந்த பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.