கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான கோயிலில் பிப். 6-ல் குடமுழுக்கு

கும்பகோணம் அருகே உள்ள, கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான கோயிலில் பிப். 6-ல் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

Update: 2021-12-17 01:30 GMT

கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான கோயில்

கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான கோயில், தட்சிண பண்டரிபுரம் என போற்றப்படுகிறது. இக்கோயிலில்,  2011 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 51 அடி உயரத்தில் பண்டரிபுரம் போன்று புதிதாக ஒரு விமானமும், நீராழி மண்டபமும் கட்டப்பட்டு, நவீன முறையில் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோயில் நிறுவனா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் கூறுகையில், இக்கோயிலில் பிப்ரவரி 6-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஜனவரி 27-ஆம் தேதி முதல்,  பூா்வாங்க யாகசாலை பூஜை தொடங்குகிறது. ஜனவரி 29-ஆம் தேதி முதல் பரனூர் மகாத்மா கிருஷ்ணபிரேமி சுவாமிகள் பிரவச்சனம், நாம சங்கீா்த்தனம், 30-ஆம் தேதி முதல் வேத பண்டிதா்கள் பங்கேற்கும் வேத பாராயணம், ஓதுவாா்களின் திருமுறை பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் நாட்டின் பாரம்பரிய மடங்களின் பீடாதிபதிகள், சைவ ஆதீனங்கள், துறவியா் பெருமக்கள் என பலரும் பங்கேற்க உள்ளனா். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றாா்.

Tags:    

Similar News