மன நிம்மதியும் காரிய வெற்றியும் பெற காயத்ரி மந்திரம் சொல்லுங்க Gayathri Mantra In Tamil

Gayathri Mantra In Tamil-ராஜரிஷி விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட காயத்ரி மந்திரம் , மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டது

Update: 2022-08-27 08:51 GMT

Gayathri Mantra In Tamil-கீதையில் கிருஷ்ண பரமாத்மா 'மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்' என்றே குறிப்பிட்டுள்ளார். மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான இந்த மந்திரம் சக்தியைக் குறித்து வியந்து பாடப்பட்டது.

ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தின் பாடலாக உள்ள இந்த மந்திரம் சாவித்ரி மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இந்த மந்திரத்தின் பெருமையால் பிறகு ஒவ்வொரு கடவுளருக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரம் உருவாகத் தொடங்கியது.

காயத்ரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது :

ஓம் பூர் புவஸ்ஸுவஹ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்க்கோ தேவஸ்ய தீமஹி

தியோயோன ப்ரசோதயாத்."

காயத்ரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே பிற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. நம் மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறவும், வாழ்க்கையில் சுகமும் சந்தோஷமும் கிடைக்கவும் தினந்தோறும் காயத்ரி மந்திரத்தினை உச்சரிக்கலாம்.

உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. 'காயத்ரி' என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு "காயத்ரி மந்திரம்" என்ற பெயர் ஆயிற்று.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News