குழந்தை வரம் அருளும் கர்ப்பகரட்சாம்பிகை 108 போற்றி...
Papanasam, Garbharatsambigai, 108 praised- தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் பகுதியில் அமைந்திருக்கும் கர்ப்பகராட்சாம்பிகை, குழந்தை வரம் அருளும் தாயாக, பெண்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரை போற்றிப் பாடும் 108 போற்றிகளை நாமும் பாடுவோம்.
Papanasam, Garbharatsambigai, 108 praised- தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவிலும் அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் திருக்கருனாவூர் தலம் உள்ளது. சுவாமி கர்ப்பபுரீசுவரர், முல்லைவனநாதர், மாதவிவனேசுவரர் அம்பிகை : கருக்காத்த நாயகி, கர்ப்பகரட்சாம்பிகை அருள்பாலிக்கின்றனர்.
இத்தலம் நன்மகப்பேறுவாய்த்தற்குரிய பிரார்த்தனைத் தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். இத்தலத்திற்கு முல்லைவனம், மாதவி வனம், கர்ப்பபுரி என்பன போன்ற பெயர்களும் உண்டு. சிவபெருமான் உமாதேவியுடனும், முருகனுடனும் இருக்கும் திருக்கோலத்தை சோமஸ்கந்தர் அருட்கோலம் என்பவர்கள். அவ்வாறு சோமஸ்கந்த வடிவில் அமைந்துள்ள கோவில்களில் திருக்கருகாவூர் முல்லைவன நாதர் கோவிலும் ஒன்றாகும். இத்தலத்தில் இறைவனுக்கும், இறைவிக்கும் இடையில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகன் சந்நிதி உள்ளது.
குழந்தை வரம் அருளும் கர்ப்பகரட்சாம்பிகையை வழிபடும் 108 போற்றி தெரிந்துக்கொண்டு வழிபடுவோம்.
ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
ஓம் கர்ப்பகரட்சம்பிகையே போற்றி
ஓம் கருகாவூர் தேவியே போற்றி
ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
ஓம் மாதர் மனம் மகிழச் செய்வாய் போற்றி
ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி
ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
ஓம் சார்ந்து நிற்போரை ரட்சப்பாய் போற்றி
ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி
ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாவாய் போற்றி
ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்பாய் போற்றி
ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
ஓம் கர்ப்பப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
ஓம் மறுமையிலும் உடனிருந்து மகிழ்விப்பாய் போற்றி
ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
ஓம் சத்ரு பயம் நீங்க சரணடைந்தேன் போற்றி
ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவல் சிரிப்பழகி போற்றி
ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணை செய்வாய் போற்றி
ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கவுரியே போற்றி
ஓம் நெஞ்சில் கவலைகள் நீக்குவாய் போற்றி
ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
ஓம் சக்தியின் வடிவமே போற்றி
ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
ஓம் மங்கையரின் கர்ப்பத்தை காக்கின்றாய் போற்றி
ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
ஓம் குலம் வாழ மகவருளும் மாதே போற்றி
ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி, போற்றி!