குழந்தை வரம் வேண்டுவோருக்கு அருளும் திருக்கருகாவூர் கர்ப்பகரட்சாம்பிகை அம்மன்

Garbarakshambigai Temple History-தமிழகத்தில் சோழர்களது காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் இன்று வரை பாரம்பரிய தொன்மை வாய்ந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.

Update: 2022-10-08 09:33 GMT

Garbarakshambigai Temple History


திருக்கருகாவூர் முல்லைவனநாதர் மற்றும் கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள். (பைல்படம்)

Garbarakshambigai Temple History-தமிழகத்தில் அக்காலத்தில் கட்டப்பட்ட பல தொன்மையான கோயில்கள் இன்றளவும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருக்கருகாவூர் கர்ப்பகரட்சாம்பிகை கோயிலும் ஒன்று ஆகும்.இக்கோயிலானது சிவபெருமானின் தலம். கும்பகோணத்திற்கு தென்கிழக்கு பகுதியிலுள்ள பாபநாசம் அருகே திருக்கருகாவூரில் இக்கோயில் அமைந்துள்ளது. பாபநாசத்திலிருந்து 6 கி.மீ துாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

சோழர்கள் காலத்தில் கி.பி. 7 ம் நுாற்றாண்டில் இக்கோயிலானது திராவிடர்களின் கட்டிடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் முல்லைவனநாதராகவும் மனைவி பார்வதி கர்ப்பகராட்சம்பிகையாகயும் வீ்ற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

இக்கோயிலானது திருமணமாகி குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு ,திருமணமாகாத பெண்களுக்கு கர்ப்பகரட்சாம்பிகை அம்மன்அருள்புரிந்துவருகிறார். இக்கோயிலின் கிழக்கு புரத்தில் ராஜகோபுரமானதுகம்பீரமாக காட்சியளிக்கிறது. பக்தர்களின் நுழைவு வாயில் தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகே வசந்த மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிசிறப்பு ஆகும்.

சிவன் கோயில் என்றாலே முன்புறத்தில் பலிபீடம், நந்தி சிலை, கொடிமரம் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் . அந்த வகையில் இக்கோயிலிலும் அதேபோல் முன்புறம் இவையனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோயிலின் புராண பெயராக முல்லைவனம், மாதவிவனம், கர்ப்பபுரி என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவர்கள் கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர் ஆகி

யோர். தாயார் கர்ப்பரக்ஷாம்பிகை, கருக்காத்தநாயகி. இக்கோயிலின் தலவிருட்சம்...முல்லை ஆகும். இக்கோயிலில் க்ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம் என இருகுளங்கள் உள்ளன. இக்கோயிலில் பாடப் பெறும் பாடல்கள் அப்பர்,சுந்தரர், திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல்கள். இக்கோயிலானது சோழர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது. சோழநாட்டு தென் காவிரிக்கரையில் அமைந்த 18 வது சிவதலமாகும் இக்கோயில். வெட்டாற்று கரையில் அமைந்துள்ளது. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது ஐதீகம்.

தல வரலாறு

இக்கோயிலின் தலத்தில் ஒரு தம்பதியினர் வாழ்ந்தனர். நித்துவர் மற்றும் அவரது மனைவி வேதிகை ஆகும். அவர்களுக்கு ஊர்த்தவ மகரிஷி என்பவர் சாபமிட்டார். இதனால் வேதிகைக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இறைவன் மருத்துவம் பார்த்து அந்த பெண்ணின் கருவைக் காத்ததால் கருகாவூர் என்ற பெயர் பெற்றது.

மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்ற பல பெயர்களினால் நுால்களில் இந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த இடத்தினை திருக்களாவூர் என அழைத்தனர். மாதவி (முல்லைக்கொடி)யை தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கரு, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் (பைல்படம்)

தல சிறப்புகள்

இக்கோயிலின் மூலவர் சுயம்பு மூர்த்தி ஆவார். மேற்புறம் பிருதிவிபாகமானது புற்று மண்ணாலாகியது.இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டமும் நித்துவ முனிவர் பூசித்த சிவலிங்கமும் உள்ளது. தலவிநாயகர் கற்பக விநாயகர் ஆவார். இக்கோயிலில் உள்ள நந்திக்கே உரிய சிறப்பு என்ன தெரியுமா? உளிபடாத விடங்மூர்த்தம் என்று நந்தியை சொல்வர். ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாக இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.இத்தலமானது ஒரு காலத்தில் முல்லைவனமாக இருந்ததால் சுவாமியின் திருமேனியில் முல்லைக்கொடி சுற்றிய வடு உள்ளதைக் காணலாம்.

தமிழகத்தில் உள்ள பெண்கள் மட்டுமின்றி அண்டை மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள்இத்திருத்தலத்திற்கு வந்து சிவனையும் அம்பாளையும்தரி்சித்துவிட்டுசெல்கின்றனர். பெரும்பாலான பெண்கள் இக்கோயிலுக்கு வருகை தருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மணமாகி அடிக்கடி கருச்சிதைவுற்று மகப்பேறு ஆக முடியாத பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து கர்ப்பகரட்சாம்பிகையை வழிபட்டு செல்வதால் மகப்பேறு அடைவதாக ஐதீகம் அதுபோல் நடக்கவும் செய்கிறது.

அம்மனை தரிசிக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப காலத்தில் ஏற்படும் வேதனைகளும் அவ்வளவாக இருப்பதில்லை. கருவுடன் மரணமடைவது என்பதும் இல்லவே இல்லை. கருவடையாத பெண்களுக்கு கரு அடையும் பாக்கியத்தினையும் கருவடைந்த பெண்களுக்கு அதனை பாதுகாப்பதிலும் அம்பாள் அக்கறை கொண்டு அருள் தருகிறாள்.

கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கு சுத்தமான நெய்யினால் தீபம் இட்டு வழிபட வேண்டும். அதேபோல் நெய்யினால் அம்பாள்திருவடியில் அபிஷேகம் செய்து அந்த நெய்யை உட்கொண்டால் குழந்தைபிறக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே உள்ளது.

மேலும் இக்கோயிலில் சோழர்கள், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும் சோழ அரசரான முதலாம்ராசராசன் கல்வெட்டில் ''நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க்கூற்றத்துத் திருக்கருகாவூர்'' என்று இத்தலம் குறிக்கப்படுகிறது.

காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்கள் ஐந்து அவை:-

கருகாவூர் - முல்லைவனம்,அவளிவணல்லூர் - பாதிரிவனம்,அரதைப்பெரும்பாழி - வன்னிவனம்,

இரும்பூளை - பூளைவனம், கொள்ளம்புதூர் - வில்வவனம் என்பனவாம். இத்தலம் ஐந்தில் ஒன்றான முல்லைவனமாகும்.ஐந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கம் இன்றும் வழக்கில் உள்ளது.

கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து கும்பகோணத்திலிருந்தும் டவுன் பஸ்கள் உள்ளன.

திருத்தலப் பாடல்கள்

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே

மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்

கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்

அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.

போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்

தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்

கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்

ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே..

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

குருகாம் வயிரமாங் கூறு நாளாங் கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்

பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்

ஒருகா லுமையாளோர் பாக னுமாம் உள்நின்ற நாவிற் குரையா டியாங்

கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே..

பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற

கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் கொண்ட சமயத்தார் தேவ னாகி

ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று

காத்தானாங் காலன் அடையா வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே..

திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயிலின் குடமுழுக்கானது கடந்த 2016 ம்ஆண்டு ஜனவரி மாதம் 29 ந்தேதி நடந்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News